மதிய சாப்பாட்டுக்கு என்ன செய்வது லஞ்ச் என்ன செய்து கொடுப்பது என்று தெரியாமல் தவித்து கொண்டு இருக்கிறீர்களா? அப்போ குடைமிளகாய் வைத்து அருமையான சாதம் ஒன்றை செய்து கொடுங்கள். குடைமிளகாய் வைத்து டிபன் பாக்ஸ்க்கு சாதம் செய்வது பற்றி ஷெரின்’ஸ் கிச்சன் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
உதிரியாக வடிதத சாதம்
வரமிளகாய்
பூண்டு
எண்ணெய்
கடுகு
உளுந்து
கருவேப்பிலை
பெரிய வெங்காயம்
தக்காளி
குடைமிளகாய்
உப்பு
மஞ்சள் தூள்
செய்முறை
ஒரு மிக்ஸி ஜாரில் வரமிளகாய் மற்றும் பூண்டு போட்டு சிறிது தண்ணீர் விட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, உளுந்து, கருவேப்பிலை, பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கி தக்காளி நறுக்கி சேர்த்து வதக்கவும்.
Lunch க்கு இந்த சாதம் செய்து பாருங்க குழம்பு செய்ய தேவை இல்லை | variety rice recipes in tamil
அடுத்ததாக அதில் குடைமிளகாய் சேர்த்து உப்பு போட்டு வதக்கவும். பச்சை வாசம் நீங்கியதும் பின்னர் அதில் மஞ்சள் தூள் மற்றும் அரைத்த மசாலா போட்டு வதக்கவும். பச்சை வாசம் போனதும் வடித்த சாதத்தை சேர்த்து வதக்கி கலந்து விடவும். மேலே சிறிது உப்பு போட்டு கிளறி விட்டு இறக்கவும்.
இனி வாரத்தில் ஒருமுறை லஞ்ச்க்கு இந்த குடைமிளகாய் சாதம் செய்து கொடுங்கள். சத்தாகவும் சுவையாகவும் இருக்கும். கலராக இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிட்டு விடுவார்கள்.