கடைகளில் கிடைக்கும் செட் தோசையும் காரச்சட்னியும் இனி வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். அதே ட்ர்ர்ஸ்டில் ஆனால் கொஞ்சம் ஹெல்தியாக ஒரு செட் தோசை மற்றும் காரச்சட்னி எப்படி செய்வது என்று பார்ப்போம். சமையல் குறிப்பு பற்றி ஹோம்குக்கிங் தமிழ் யூடியூப் சேனலில் கூறியிருப்பதாவது,
முதலில் செட் தோசை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1 கப் (250 கிராம்)
உளுந்து - 1/4 கப்
வெந்தயம் - 1 தேக்கரண்டி
தண்ணீர்
அவல் - 1/4 கப் (125 கிராம்)
உப்பு - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி
நெய்
நீங்கள் எப்போதும் வீட்டில் சமைக்கும் அளவு முறையையே இதற்கும் பயன்படுத்தலாம்.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து நன்றாக கழுவி தண்ணீர் ஊற்றி 3 மணிநேரம் ஊறவைக்கவும். அடுத்து பாத்திரத்தில் அவல் சேர்த்து நன்றாக கழுவி தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊறவைக்கவும். பின்பு ஊறவைத்த அனைத்தையும் மிக்சியில் சேர்த்து நன்கு அரைக்கவும்.
டிபன் காம்போ ரெசிப்பீஸ் | Tiffin Combo Recipes In Tamil | Set Dosa | Kara Chutney
அரைத்த மாவுடன் உப்பு சேர்த்து நன்கு கை விட்டு கலந்து 8 மணிநேரம் புளிக்க வைக்க வேண்டும். புளித்த மாவுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும். அடுத்து தோசை கல்லை சூடாக்கி மாவை சேர்த்து சுற்றிலும் நெய் ஊற்றி மூடி வைத்து சுட்டு எடுக்கவும். மாவை இரண்டு பக்கமும் திருப்பி போட்டு சுட்டு எடுத்தால் அருமையான செட் தோசை ரெடியாகிவிடும்.
கார சட்னி - தேவையான பொருட்கள்
வெங்காயம் - 3 நறுக்கியது
பூண்டு - 2 பற்கள்
தக்காளி - 2 நறுக்கியது
பியாத்கே மிளகாய் - 12
கல் உப்பு - 1 தேக்கரண்டி
புளி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
நீங்கள் எப்போதும் வீட்டில் சமைக்கும் அளவு முறையையே இதற்கும் பயன்படுத்தலாம்.
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். அதில் மிளகாய், கல் உப்பு, புளி சேர்த்து வதக்கி நன்கு ஆறவிடவும்.
பின்பு நன்கு ஆறவிட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். இப்போது இதை தாளிப்பதற்காக ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து கலந்துவிடவும். பின்பு கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து அரைத்த சட்னியை சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான கார சட்னி தயார்.