வெதுவெதுப்பான தண்ணீருடன் கொஞ்சம் மஞ்சள்; காலையில் வெறும் வயிற்றில் இப்படி குடிச்சுப் பாருங்க: டாக்டர் நித்யா

வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் மஞ்சள் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கல்லீரல் கொழுப்பை குறைக்க முடியும் என்று டாக்டர் நித்யா கூறுகிறார்.

வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் மஞ்சள் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கல்லீரல் கொழுப்பை குறைக்க முடியும் என்று டாக்டர் நித்யா கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
கல்லீரல் கொழுப்பு

கல்லீரல் கொழுப்பு

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப்பழக்கத்தால் நமது கல்லீரலில் கொழுப்பு படிகிறது. கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு படிவதால் ஏற்படக்கூடிய நோய் தான் ஃபேட்டி லிவர். இரவு தூக்கம் இல்லாதது, மது அருந்துவர்கள் மற்றும் மது அருந்தாத சிலருக்கும் இந்த பிரச்சனை வரும். 

Advertisment

இதற்கு பெரிய அறிகுறிகள் எதுவும் இல்லை என்றாலும், அடிவயிற்றின் மேல் வலது பக்கத்தில் வலி அல்லது அசௌகரியம் போன்றவை இருக்கும் என்று மருத்துவர் கூறுகிறார். இந்தப் பிரச்சனைக்கான முக்கிய தீர்வு உணவு, உடற்பயிற்சி மற்றும் மூலிகைகள் ஆகும். 

அதிகப்படியான மது அருந்துவது, கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது ஆகியவை முக்கிய காரணம் ஆகும். கொழுப்பு கல்லீரல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தரக்கூடிய சில வீட்டு வைத்தியங்கள்  உள்ளன. சில குறிப்பிட்ட உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொளவது கல்லீரலில் சேர்ந்துள்ள கொழுப்பை கரைக்கும் என்றும் மருத்துவர் நித்யா கூறுகிறார். 

இதுகுறித்து டாக்டர் நித்யா’ஸ் வரம் யூடியூப் பக்கத்தில் மருத்துவர் நித்யா கூறியதாவது,  

Advertisment
Advertisements

யாருக்கெல்லாம் ஃபேட்டி லிவர் வரும்: உடல் பருமன், இரவு உறக்கம் இல்லாதவர்கள், தைராய்டு, உணவு பழக்கம், குழந்தை பேருக்கு பிறகும் சில பெண்களுக்கு வரும்.

முதலில் உடலில் உள்ள கொழுப்பு அளவை தெரிந்து கொள்ள வேண்டும். அதிகம் இருந்தால் அதை குறைக்க வேண்டியது அவசியம்.

கல்லீரல் கொழுப்பை கரைக்க | Fatty Liver | rice சாப்பிட்டால் கல்லீரல் பிரச்சனை வருமா? | Fatty liver

நீண்ட நாட்களாக கல்லீரல் கொழுப்பு பிரச்சனை உள்ளவர்களுக்கு இதயம் சம்பந்தமான பிரச்சனை வரும். இதனால் மஞ்சள் காமாலை வரும்.

கல்லீரல் கொழுப்பை குறைக்க வழிகள்: உடல் பருமன் உள்ளவர்கள் உடலை ஒரு மாதத்தில் 5 கிலோ குறைக்க வேண்டும். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும். 

உடற்பயிற்சி, யோகா முறையாக மேற்கொள்ளலாம். 

மூலிகைகள்: வெதுவெதுப்பான தண்ணீரில் மஞ்சள் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். 

கல்லீரல் கர்ப்பம் - வெள்ளை கரிசலாங்கண்ணி, தூதுவளை,  முசுமுசுக்கை, அதிமதுரம் உள்ளிட்ட சில மூலிகைகள் உள்ள சூரணத்தை வாங்கி சுடு தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.  

நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகளை சாப்பிடலாம். குறிப்பாக வாழைத்தண்டு ஜூஸ், அவரைக்காய், கொத்தவரங்காய், கோவக்காய் வாரத்தில் 5 நாட்கள் சாப்பிடலாம்.

அடுத்ததாக சின்ன வெங்காயம் சாறு எடுத்து மஞ்சள் தூள், தேன் கலந்து குடிக்கலாம். 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Food Health hazards of having a fatty liver

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: