பிரியாணி பிரியரா? இந்த டிரிங் முதல்ல குடிச்சிட்டு சாப்பிடுங்க… கலோரி ஏறாது; டாக்டர் வேணி
பிரியாணி சாப்பிடுவதற்கு முன்னர் ஒரு பானம் தயாரித்து குடிக்க வேண்டும் என்று மருத்துவர் வேணி அறிவுறுத்துகிறார். ஏனெனில், இந்த பானம் எளிதான செரிமானத்திற்கு உதவியாக இருக்கும் என்று அவர் கூறுகிறார்.
பிரியாணி சாப்பிடுவதற்கு முன்னர் ஒரு பானம் தயாரித்து குடிக்க வேண்டும் என்று மருத்துவர் வேணி அறிவுறுத்துகிறார். ஏனெனில், இந்த பானம் எளிதான செரிமானத்திற்கு உதவியாக இருக்கும் என்று அவர் கூறுகிறார்.
நம்மில் பலருக்கு மிகவும் பிடித்தமான உணவாக பிரியாணி விளங்குகிறது. ஏறத்தாழ, கடந்த 5 ஆண்டுகளில் பிரியாணி மீதான மோகம் பொதுமக்களுக்கு அதிகரித்து விட்டதாக மருத்துவர் வேணி கூறுகிறார். இதன் காரணமாக தற்போது மிட்-நைட் பிரியாணி ட்ரெண்ட் அதிகரித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
ஆனால், ஒரு முறை பிரியாணி சாப்பிடுவதன் மூலமாக அதிகப்படியான கலோரிகள் சேர்கிறது என்று மருத்துவர் வேணி எச்சரிக்கை விடுக்கிறார். இதனால், பிரியாணி சாப்பிடும் போது நம் உடல் நலனை பாதிக்காத வகையில் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகளை அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இரவு நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர் வேணி அறிவுறுத்துகிறார். குறிப்பாக, மதிய உணவாக சுமார் பிற்பகல் 3 மணிக்கு முன்னதாக பிரியாணி சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவும் என்று அவர் பரிந்துரைக்கிறார்.
அவ்வாறு, பிரியாணி சாப்பிடும் தினத்தன்று இரவு உணவாக பழங்களை மட்டும் சாப்பிடலாம். மேலும், பிரியாணி சாப்பிடும் போது அத்துடன் இனிப்பு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பிரியாணி சாப்பிடும் போது நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது, கலோரிகளை குறைக்க ஓரளவிற்கு உதவும் என்று மருத்துவர் வேணி கூறுகிறார்.
Advertisment
Advertisements
குறிப்பாக, பிரியாணி சாப்பிடுவதற்கு முன்பாக ஒரு பானம் தயாரித்து குடிக்க வேண்டும். 200 மில்லி லிட்டர் தண்ணீரில், எலுமிச்சை சாறு, இரண்டு கிராம் பட்டை தூள் மற்றும் சிறிதளவு வினிகர் கலந்து குடிக்கலாம். இந்த பானம் நார்ச்சத்தை அதிகப்படுத்துகிறது. இது செரிமானத்தை எளிதாக்கி, கலோரிகளையும் குறைக்குறது என்று மருத்துவர் வேணி அறிவுறுத்துகிறார்.
அந்த வகையில், அடுத்த முறை பிரியாணி சாப்பிடுவதற்கு முன்பாக இந்த வழிமுறைகள் அனைத்தையும் பின்பற்றும் போது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும்.
நன்றி - Neuro Doctor Tamil Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.