/indian-express-tamil/media/media_files/2025/06/04/4Nq1dEtWQ4BnNHApUgZ0.jpg)
மதுப்பழக்கத்தில் இருந்து மீண்டு வர வேண்டும் என்று நினைப்பவர்கள் மேற்கொள்ளக் கூடிய சில முக்கியமான வழிமுறைகள் குறித்து மருத்துவர் செல்வா சண்முகம் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்த தகவல்களை டாக்டர் விகடன் யூடியூப் சேனலில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கால இளைஞர்களிடம் மது அருந்தும் பழக்கம் அதிகமாக இருக்கிறது என்று மருத்துவர் செல்வா சண்முகம் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, மது அருந்துவது தவறு என்ற கண்ணோட்டத்தை அவர்கள் கவனிப்பதில்லை என்றும் அவர் கூறுகிறார். இதன் காரணமாக மிக இளம் வயதில் இருந்து மது பழக்கத்திற்கு அடிமையாகும் நிலை உருவாகி இருக்கிறது.
அந்த வகையில், மதுப்பழக்கத்திற்கு அடிமையான ஒரு நபர் அதில் இருந்து மீண்டு வர வேண்டும் என்று நினைத்தால் சில வகையான சாறுகள் குடிக்கலாம் என்று மருத்துவர் செல்வா சண்முகம் பரிந்துரைக்கிறார்.
இதற்காக, 4 தேக்கரண்டி விளக்கெண்ணெய், 2 தேக்கரண்டி இஞ்சிச் சாறு, 4 தேக்கரண்டி தேன், அரை கிளாஸ் சுடுதண்ணீர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து குடிக்கலாம். இவ்வாறு செய்தால் வயிறு மொத்தமும் சுத்தமாகும் என்று மருத்துவர் செல்வா சண்முகம் கூறுகிறார்.
இப்படி குடித்த பின்னர், அன்றைய தினம் முழுவதும் உப்பு இல்லாத அரிசி கஞ்சி சாப்பிடலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார். இப்படி செய்யும் போது வயிற்றில் இருக்கும் கழிவுகள் மற்றும் நச்சுகள் வெளியேறும் என்று கூறப்படுகிறது.
இது தவிர மதுப்பழக்கத்தில் இருந்து மீண்டு வர நினைப்பவர்கள் நாவல் பழச்சாறு, நெல்லிக்காய் சாறு, இஞ்சிச் சாறு போன்றவற்றை குடிக்கலாம் என்று மருத்துவர் செல்வா சண்முகம் அறிவுறுத்துகிறார். மேலும், எலுமிச்சை சாறில் சுக்குத் தூள், தேன் மற்றும் கறிவேப்பிலை பொடி கலந்து குடிக்கலாம்.
இரவு உறங்குவதற்கு முன்பாக அதிமதுரம், கசகசா, ஜாதிக்காய் மற்றும் தேன் கலந்து கசாயம் செய்து குடிக்கலாம். இவற்றை பின்பற்றும் போது குடிப்பழக்கத்தில் இருந்து மீளலாம் என்று மருத்துவர் செல்வா சண்முகம் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.