சப்பாத்தி அனைவருக்கும் ஏற்ற உணவாக உள்ளது. குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்பர். சீக்கிரம் கெட்டு விடாது. வெளி இடங்களுக்கு செல்லும் போது, ரயில், பஸ் பயணத்தின் போது சப்பாத்தி, தக்காளி தொக்கு எடுத்து செல்வதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர். வட மாநிலங்களில் சப்பாத்தி முக்கிய உணவாக உள்ளது. சர்க்கரை உள்ளவர்கள் கோதுமை வகையில் உணவு எடுத்துக் கொள்வர். அந்தவகையில் சப்பாத்தி முக்கிய உணவாக இருக்கிறது.
இப்போது சப்பாத்திக்கு மாவு பிசையும் போது நாம் செய்யவேண்டிய சில எளிய டிப்ஸ் பற்றி இங்கு பார்க்கலாம். மிருதுவான சப்பாத்தி செய்வது குறித்துப் பார்க்கலாம்.
1. ஒரு கப் கோதுமை மாவிற்கு 2 டேபிள் ஸ்பூன் மைதா மாவு சேர்க்க வேண்டும். அத்துடன் 1/2 டீஸ்பூன் பேக்கிங் பெளடரையும் ஒரு ஸ்பூன் எண்ணெயையும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட வேண்டும். மாவில் சூடான நீரை ஊற்றி அதிக கெட்டியாக இல்லாமல் லேசாக பிசைந்தால் நன்றாக இருக்கும்.
2. மாவு பிசைந்தவுடன் குறைந்த பட்சம் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். சப்பாத்தி உருண்டை நம் விருப்பம் போல் பிடிக்கலாம். சப்பாத்திக்கல் வைத்து தீயை வேகமாக வைக்க வேண்டும். பின், சப்பாத்தி உருண்டையை கல்லில் போட்டு இரு பக்கங்களும் பிரட்டிப் போடும்போது கொஞ்சம் எண்ணெய் சேர்த்தால் சப்பாத்தி சாஃப்டாக வரும்.
3. ஒரு துணியை வைத்துக் கொண்டு சப்பாத்தியின் இரு பக்கங்களையும் அழுத்தினால் சப்பாத்தி புஸ்ஸென்று உப்பிக்கொண்டு வரும். அல்லது தீயில் நேரடியாக சப்பாத்தியை இரு பக்கமும் வாட்டி எடுத்தால் சப்பாத்தி புஸ்ஸென்று சாஃப்டாக வரும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil