பொதுவாகவே காலை நேரத்தில் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். நீங்கள் கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்ளாமல் பல மணிநேரம் உறங்குகிறீர்கள், ஆனால் காலையில் எழுந்ததும் உங்கள் குளுக்கோஸ் அளவு அதிகமாக இருக்கும். இதற்கான காரணத்தையும், அதனை தடுக்கும் முறைகளையும் இச்செய்தி தொகுப்பில் காணலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு காலை 3 மணி முதல் 8 மணி வரை ரத்த சர்க்கரை அளவு அதிகரித்தே காணப்படும். ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படும். நீரிழிவு இல்லாதவர்களுக்கு, இன்சுலின் அளவு அதிகரிக்கிறது ஆனால் ஹைப்பர் கிளைசீமியாவை அனுபவிக்க மாட்டார்கள். மற்றொன்று, அதிக காலை குளுக்கோஸ் அளவை அனுபவிக்கும் மற்றொரு காரணம், உட்செலுத்தப்பட்ட இன்சுலின் திறன் குறைந்துவிடும். அதேபோல், சோமோகி பாதிப்பும் காரணமாக இருக்கலாம். அதாவது, அதிகப்படியான இன்சுலின் அல்லது மருந்துகளால் இரவில் உங்கள் குளுக்கோஸ் அளவுகள் குறைவாகலாம். அப்போது, குளுக்கோஸ் அளவை பராமரிக்க கல்லீரல் அதிக குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது, இது ஹைப்பர் கிளைசீமியாவை ஏற்படுத்தும்.
அறிகுறிகள்
- அடிக்கடி சிறுநீர் கழித்தல்
- தாகம் அதிகரிப்பு
- அதிகம் சாப்பிடுதல்
- பார்வை மங்களாக இருப்பது
காலையில் சுகர் அளவை கட்டுப்படுத்துவது எப்படி
- தூங்க செல்வதற்கு முன்பு குளுக்கோஸ் அளவை செக் செய்வது
- இரவு லேட்டாக சாப்பிடும் போது, உணவு உட்கொள்ளும் அளவை குறைத்துகொள்ளுங்கள்
- இன்சுலின் சரியான அளவு எடுத்துள்ளமா என்பதை செக் செய்ய வேண்டும்.
- மாலையில் உடற்பயிற்சி மேற்கொண்டால், அடுத்த நாள் காலை சுகர் அதிகரிப்பை கட்டுப்படுத்தலாம்.
- அதேபோல், காலை எழுந்தததும் உடற்பயிற்சி செய்தால், அதிகரித்த சுகர் அளவை கட்டுக்குள் கொண்டு வரலாம்
- உங்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் இருந்தால், அதிகாலையில் ஹைப்பர் கிளைசீமியாவைக் ஏற்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த உங்கள் குளுக்கோஸை குறைக்கும் மருந்துகளைப் பற்றி மருத்துவருடன் பேசுங்கள்.
ஒவ்வொரு நபரின் உடலும் வேறுபட்டது, மேலும் இரவு மற்றும் காலை முழுவதும் இந்த உயர் குளுக்கோஸ் அளவுகளின் கலவையை நீங்கள் அனுபவிக்கலாம். அறிகுறிகள் தென்பட்டால், அதனை தடுக்கும் முயற்சிகளை உடனே மேற்கொள்வது நல்லது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil