scorecardresearch

இஞ்சி- பூண்டு பேஸ்ட்: டெய்லி அரைக்க வேண்டாம்; இப்படி ஸ்டோர் பண்ணுங்க!

நாம் சமைக்கும் பிரியானி, தக்காளி சாதம், அசைவ உணவு என்று எல்லாவற்றிலும் இஞ்சி-பூண்டு விழுது மிகவும் முக்கியம். இந்நிலையில் நாம் இன்ஸ்டண்டாக இஞ்சி-பூண்டு விழுது கிடைக்கிறது. ஆனால் அது உணவில் சேர்த்தால், அதிக சுவை கிடைக்காது.

இஞ்சி- பூண்டு பேஸ்ட்: டெய்லி அரைக்க வேண்டாம்; இப்படி ஸ்டோர் பண்ணுங்க!

நாம் சமைக்கும் பிரியானி, தக்காளி சாதம், அசைவ உணவு என்று எல்லாவற்றிலும் இஞ்சி-பூண்டு விழுது மிகவும் முக்கியம். இந்நிலையில் நாம் இன்ஸ்டண்டாக இஞ்சி-பூண்டு விழுது கிடைக்கிறது. ஆனால் அது உணவில் சேர்த்தால், அதிக சுவை கிடைக்காது. இதனால் வீட்டிலேயே எளிதாக அரைக்க வேண்டும். இந்நிலையில் இஞ்சி- பூண்டு விழுதை எப்படி நீண்ட நாட்கள் சேமித்து வைப்பது என்பதை தெரிந்துகொள்வோம்.

இருக்கமான பாத்திரம்

காற்று நுழையாமல் இருக்கும் பாத்திரத்தில் இதை வைத்தால், நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும். இதனால் அதிக நாட்கள் வரை நீங்கள் பயன்படுத்த முடியும்.

பிளாஸ்டிக் பை

சிப் உள்ள பைகளில் போட்டு வைக்கலாம். பாத்திரம் இல்லையென்றால் இதுபோன்று செய்யலாம்.

உப்பு

நீங்கள் இஞ்சி- பூண்டு விழுது தயாரிக்கும்பொது, உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து சேமித்து வைக்கவும். அப்படி வைத்தால், நீண்ட நாட்கள்வரை பயன்படுத்தலாம். இது ஒரு நல்ல டிப்ஸ்

வினிகர்

மேலும் அதிகபடியாக இஞ்சி- பூண்டு விழுதில் வினிகர் ஊற்றி வைத்தால், இந்த விழுது பச்சையாக மாறாமல் இருக்கும். மேலும் புதிதாக அரைத்ததுபோலவே  இருக்கும்.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Tips to store ginger garlic paste