திருப்பதி என்றாலே எல்லோரின் நினைவுக்கு வருவது ஏழுமலையானும், லட்டும் தான். சாமி கும்பிட்ட பின் சுவையான லட்டு வாங்க பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பர்.
Advertisment
இந்த சுவையான லட்டு-ஐ நம் வீட்டிலே செய்யலாம். திருப்பதி லட்டில் பயன்படுத்தப்படும் கீழ்கண்டப் பொருட்கள் வீட்டில் இருந்தால் நீங்களே லட்டு செய்யலாம். செஃப் தீனா தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள ஈஸி ரெசிபி இங்கே.
தேவையான பொருட்கள்
கடலை மாவு – 250 கிராம்
சர்க்கரை – 500 கிராம்
பால் – 100 மில்லி லிட்டர்
முந்திரி – 25 கிராம்
திராட்சை – 25 கிராம்
கிராம்பு – 10
ஏலக்காய் பொடி – ¼ டீஸ்பூன்
ஜாதிக்காய் பொடி – சிறிதளவு
பச்சை கற்பூரம் – சிறிதளவு
கல்கண்டு – 25 கிராம்
எண்ணெய் – தேவையான அளவு
நெய் – 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் சர்க்கரையில் 250 மி.லி தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். ஒரு கொதி வந்தவுடன் அப்படி இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் கடலை மாவை எடுத்துக் கொண்டு அதனுடன் பால் மற்றும் 225 மி.லி தண்ணீர் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், எண்ணெய் ஊற்றி காய வைக்க வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் பூந்தி வடிக்கட்டியில் மாவு ஊற்றி பூந்தி செய்துக் கொள்ள வேண்டும்.
எண்ணெய்யில் இருந்து பூந்தியை எடுத்த உடன் சர்க்கரை பாகில் போட்டுவிட வேண்டும். அடுத்து முந்திரி, கிராம்பு, திராட்சையை வறுத்துக் கொள்ள வேண்டும். திராட்சையை தனியாக வறுத்துக் கொள்ளுங்கள்.
இவற்றை பூந்தியில் சேர்த்து ஜாதிக்காய் பொடி, பச்சை கற்பூரம், கல்கண்டு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும். இதனை அரை மணி நேரத்திற்கு மேலாக அப்படியே ஊற வைக்க வேண்டும்.
இப்போது பூந்தியை எடுத்து லட்டுக்களாக பிடித்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான திருப்பதி லட்டு ரெடி. நீங்களும் உங்கள் வீட்டில் செய்துப் பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“