நம்மில் பலருக்கு தூக்கம் வருவது அவ்வளவு எளிதாக நடப்பதில்லை. இந்நிலையில் நமக்கு நன்றாக தூக்கம் வர வேண்டும் என்றால் நிச்சயம் இதை நாம் குடிக்கலாம்.
மஞ்சள் தூள் சேர்த்த பால்
இந்நிலையில் இதில் டிரைப்டோபேன் உள்ளது. இந்த அமினோ ஆசிட் பாலில் உள்ளது. இது மஞ்சள் பொடியில் சேர்ந்தால் நமக்கு நன்றாக தூக்கம் ஏற்படும். மேலும் வீக்கத்தை குறைக்கும்.
குங்குமப் பூ பாதாம் பால்
குங்குமப் பூவில் நமது மனநிலையை மகிழச்சியாக வைக்கும் பண்பு உள்ளது மேலும் ஓய்வாக உணர வைக்கும். இந்நிலையில் பாதாம் பால் மற்றும் குங்குமப் பூ மெக்னீஷியம் மற்றும் டிரைப்டோபேன் சேர்ந்து நன்றாக தூக்கம் ஏற்படுத்தும்.
இந்நிலையில் குங்குமப் பூவை பாலில் ஊறவிட வேண்டும். தண்ணீர் மற்றும் பாதாமை அரைத்துக்கொண்டு, அதை இந்த பாலில் சேர்க்க வேண்டும். தேவைப்பட்டால் தேன் சேர்க்கலாம்.
துளசி டீ
இந்நிலையில் துளசியில் மன அழுத்தத்தை குறைக்கும் பண்புகள் உள்ளது. இந்நிலையில் துளசி டீ-யில் ஏலக்காய், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து இந்த டீயை குடிக்க வேண்டும். இந்நிலையில் துளசி டீயை, நாம் தூங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக குடிக்க வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil