தயிர் சாப்பிடலாமா எப்போது சாப்பிட வேண்டும் என்ற கேள்வி எப்போதும் எழும். இரவு நேரத்தில் தயிர் சாப்பிடக்கூடாது என்றும் கூறப்படுகிறது. தயிரில் கொழுப்பு சத்து இருப்பதால், இரவு நேரத்தில் சாப்பிடும்போது அஜீரணம் ஏற்படும் குறிப்பாக வயிற்று பிரச்சனை இருப்பவர்கள் இரவு நேரத்தில் தயிர் சாப்பிடாமல் இருப்பது நல்லது.
தயிரில் ப்ரோபயாட்டிக்ஸ் இருக்கிறது. இந்நிலையில் உயிரோடு இருக்கும் பாக்டிரியா மற்றும் ஈஸ்ட் தயிரில் இருப்பதால் அது குடலுக்கு நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குடலில் இருக்கும் பேக்டீரியாவை அது ஊக்கப்படுத்துகிறது. இதில் இருக்கும் கால்சியம், புரோட்டீன் எலிம்பு வளர்ச்சி மற்றும் சதை வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் இதில் பி12, ரிபோபிலாவின் இருப்பதால், ஆரோக்கியமான சருமம் மற்றும் கூந்தல் கிடைக்க உதவுகிறது.
சிறுநீரகம் தொடர்பான நோய், கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், தயிர் சாப்பிடக்கூடாது.
தயிரை காலை வேளையில், மதிய நேரத்திலும் சாப்பிடலாம். வழக்கம்போல் தனியாக அல்லது உணவுடன் சேர்த்தும் சாப்பிடலாம். இந்நிலையில் மாம்பழங்கள் அல்லது வாழைப்பழத்துடனும் இதை சாப்பிட முடியும்.
வெயில் காலத்தில் தயிர் சாப்பிட்டால் அது குளுமையாகவும், புத்துணர்வையும் தரும். மேலும் குளிர் காலத்திலும் தயிர் சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“