நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டால் எந்த உணவை சாப்பிடுவது? எந்த உணவை தவிர்ப்பது ? என்ற கேள்விகள் நம்மை கடும் குழப்பத்தில் ஆழ்த்தும். நீரிழிவு நோய் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. மேலும் நீரிழிவு நோய் பாதிப்பு கடந்த 10 ஆண்டுகளாகவே 150% அதிகரித்துள்ளது.
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. மேலும் பரம்பை நோயாகவும் இது இருக்கிறது.சரியான உணவு முறை, உடல்பயிற்சி, தூக்கம் இவையே நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும், ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது. இந்நிலையில் தக்காளி நீரிழிவு நோய் பாதித்தவர்களுக்கு ஒரு வரப் பிரசாதமாக இருக்கிறது.

இந்திய உணவில் தவிர்க்க முடியாத ஒன்றாக தக்காளி மாறியிருக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு தக்காளி சக்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் வைட்டமின் சி, பொட்டாஷியம், லைக்கோபென்னே (lycopene) என்ற ஆன்டி ஆக்ஸிடண்ட் இருப்பதால் நமது செல்கள் தனைத்தானே சரி செய்து கொள்ள உதவுகிறது. மேலும் பக்கவாதம் ஏற்படாமல் தடுக்கிறது. இன்சுலின் அளவை சீராக்குவதற்கு தக்காளி உதவியாக இருக்கிறது.
தக்காளி பழத்தில் ஆரோக்கியமான நார்ச்சத்து இருக்கிறது. மேலும் இதை சாப்பிட்டால் அதிக பசி எடுக்காமல் இருக்கும். ஒரு நிறைவான உணர்வு ஏற்படும். ரத்ததில் சீராக சக்கரை சேர்வதை உறுதி செய்கிறது. இதில் குறைந்த கிளைஸிமிக் இண்டக்ஸ் இருப்பதால், தக்காளி ஒரு நீரிழிவு நோயாளியின் நண்பாக பார்க்கப்படுகிறது(glycemic index)
தக்காளியை சமைத்து சாப்பிடுவதைவிட சாலட், ஸ்மூத்தி, ஜீஸ், சூப், சான்வெஜ் இவற்றில் சேர்த்து சாப்பிடலாம்.
தக்காளி ஸ்மூத்தி செய்முறை- 1 பெரிய தக்காளி, ½ கப் துருவிய கேரட், 3-4 கொத்தமல்லி, இஞ்சி சிறிய துண்டு,2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்றாக அடித்துக்கொள்ளவும். இதில் உப்பு மற்றும் பெப்பர் தூள் சேர்த்தால் தக்காளி ஸ்மூத்தி ரெடி