இந்த முறையில் தக்காளி சட்னியை செய்தால், சுவை சூப்பராக இருக்கும். இந்த ரெசிபியை தெரிந்துகொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
தக்காளி
வெங்காயம்
பூண்டு
மிளகாய் தூள்
உப்பு
சர்க்கரை
நல்லெண்ணை
கொத்தமல்லி
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணை எடுத்துக்கொண்டு , சூடானதும் அதில் தக்காளியை இரண்டு துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும். தொடர்ந்து நன்றாக வதக்க வேண்டும். தக்களி நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். அதில் இருக்கும் தக்களியை தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள். அதே எண்ணெய்யில் பூண்டு மிளகாய் பொடி சேர்த்து வதக்க வேண்டும். நன்றாக வறுபட்டதும் தக்காளியை தோல் நீக்கி சேர்க்க வேண்டும். தொடர்ந்து நறுக்கிய வெங்காயம், கொத்த மல்லி உப்பு, சேர்த்து கிளரவும். நன்றாக வெந்ததும், தக்காளி ஆகியவற்றை மசிக்க வேண்டும். புதுவித தக்காளி சட்னி ரெடி.