சூப் வகைகள் பலருக்கும் பிடிக்கும். சைவம், அசைவம் இரண்டு வகையிலும் சூப் உள்ளன. ஹோட்டலுக்கு சென்றால் முதலில் சூப் வகைகள் தான் நம்மிடம் பரிந்துரைப்பார்கள். விதவிதமான சூப் வகைகள் உள்ளன. அந்தவகையில் வீட்டிலேயே ஈஸியாக தக்காளி தேங்காய் பால் சூப் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
தக்காளி - 2
தேங்காய் பால் - 2 டீஸ்பூன்
தனியாத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
பிரெட் - பிரெட்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தக்காளியை போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். பின் தக்காளி ஆறியதும், தோலை உரித்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அடுத்து பாத்திரத்தில் தக்காளி விழுது, 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், தனியாத்தூள் கலந்து இறக்கி, அதன் மேலே தேங்காய் பால், கொத்த மல்லித்தழை, பொரித்த பிரெட் துண்டுகள் தூவி பரிமாறவும். முன்னதாக பிரெட்டின் ஓரப்பகுதியை நறுக்கி எண்ணெயில் போட்டு லேசாக பொரித்து எடுத்து சேர்க்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil