சைடு டிஷ் கூட இல்லாமல் சாதத்துக்கு ஏற்ற ஒரு தக்காளி குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம். பேச்சுலர்ஸ் எல்லோருக்கும் இந்த மாதிரி ஒரு குழம்பு செய்வது ஈஸியாக இருக்கும். அவ்வளவு ஈஸியான தக்காளி தயிர் குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய்
கடுகு
சீரகம்
உலர்ந்த சிவப்பு மிளகாய்
துருவிய இஞ்சி
பெருங்காயத்தூள்
கறிவேப்பிலை
நறுக்கிய வெங்காயம்
தக்காளி
உப்பு
மஞ்சள் தூள் -¼ஸ்பூன்
மிளகாய் தூள் -½ஸ்பூன்
சீரக தூள் -¼ஸ்பூன்
தயிர் -100 கிராம்
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் கடுகு, சீரகம், வரமிளகாய், துருவிய இஞ்சி, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி அதனுடன் வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்.
அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள் சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும். இப்போது அடுப்பை அணைத்துவிட்டு தயிர் சேர்த்து கலந்துவிட்டு இறக்கினால் சுவையான தக்காளி தயிர் குழம்பு ரெடியாகிவிடும். அப்பளம், ஆம்லெட், உருளைக்கிழங்கு பொரியல் என எது வைத்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.