தக்காளி ரசம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
புளி – எலுமிச்சை அளவு
தக்காளி – 2
மஞ்சள் பொடி – 1 ஸ்பூன்
உப்பு – திட்டமாக
மல்லித் தழை – சிறிது
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
பூண்டு – 6 பல்
கறிவேப்பிலை – 1 ஆர்க்
தாளிக்க
நெய் – 1 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் 1 கப் நீரில் புளி கரைத்து தக்காளியைப் பிசைந்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். புளி பச்சை வாசனை போனதும் மிளகு, சீரகம், பூண்டு தட்டிப் போட்டு மேலும் நீர் சேர்த்து கொதிக்கவிடவும். ஒரு முறை கொதி வந்ததும் அடுப்பை அணைத்து நெய்யில் கடுகு தாளித்துப் போட்டு மல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான தக்காளி ரசம் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“