இட்லி தோசை சாதம் என அனைத்து வகையான உணவிற்கும் ஏற்ற தக்காளி தொக்கு எப்படி செய்வது என்று பார்ப்போம். இது கை வைக்காமல் பக்குவமாக எடுத்து வைத்துக் கொண்டால் ஒரு மாதம் ஏன் மூன்று மாதம் வரை கூட கெடாமல் வைத்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
தக்காளி
புளி
உப்பு
நல்லெண்ணெய்
தக்காளி
கருவேப்பிலை
பூண்டு
காய்ந்த மிளகாய்
வெல்லம்
மிளகாய் தூள்
உப்பு
வெந்தய தூள்
பெருங்காயத் தூள்
செய்முறை
தேவையான அளவு பழுத்த தக்காளிகளை எடுத்து கழுவு வைக்கவும். பின்னர் ஒரு பவுலில் எலுமிச்சை பழம் அளவிற்கு புளி எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் தக்காளியை நன்கு கழுவி அறுத்து வைக்கவும். இதை புளி வைத்துள்ள பவுலில் சேர்த்து கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் புளி மற்றும் தக்காளியை சேர்த்து மசித்து விடவும்.
புளி நன்கு கரைந்து தக்காளியும் மசித்து அதில் உள்ள தண்ணீரிலேயே நன்கு வெந்து கொதி வர வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரில் ஈரப்பதம் இல்லாமல் எடுத்து இந்த தக்காளி தொக்கு சேர்த்து நன்கு அரைக்கவும்.
பின்னர் கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கருவேப்பிலை, பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து மொருமொருப்பாகும் வரை வறுத்து அரைத்து வைத்துள்ள தக்காளி தொக்கு கைப்படாமல் அதில் சேர்த்து கிளறவும்.
தக்காளி தொக்கு இப்படி செய்யுங்க இட்லி ,தோசை,சப்பாத்தி,சாதமுடன் அருமை/Thakkali Thokku/Tomato pachadi
பின்னர் இதில் சிறிதாக எண்ணெய் பிரிந்து வரும் ஆரம்பத்திலேயே மிளகாய் தூள், உப்பு, வெந்தய தூள், பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
இதில் சுவையைக் கூட்டிக் கொடுப்பதற்காக சிறிது வெல்லம் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் பதத்தில் எடுத்து சாப்பிட ஆரம்பிக்கலாம். கை படாமல் ஒரு பவுலில் வைத்துக் கொண்டால் ஒரு மாதத்திற்கு இதனை பயன்படுத்தலாம்.
இந்த தகவல்கள் கவிதா சமையலைறை யூடியூப் பக்கத்தில் அவர் செய்து காட்டிய வீடியோவில் இருந்து பெறப்பட்டது.