இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று நீரிழிவு நோய். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சமநிலை தவறும்போது இந்நோய் ஏ்ற்படுகிறது. இந்நோய் தாக்கம் உள்ளவர்கள் தங்களது உணவில் கட்டுப்பாடுகளை செயல்படுத்த வேண்டியது அவசியம்.
அதுவும் டைப் 2 நீரிழிவு அல்லது ப்ரீடியாபயாட்டீஸ் உள்ளவர்களுக்கு, இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பது ஆரோக்கியமாக இருப்பதற்கான மிக முக்கிய தேவைகளில் ஒன்றாகும். ஆனால் உயர் இரத்த சர்க்கரை அல்லது ஹைப்பர் கிளைசீமியாவை நிர்வகித்தல், சரியான உணவுகளை கண்டுபிடித்து சிறந்த உணவு வகைகளை எடுத்துக்கொள்ளும் நபர்களுக்கு இது ஒரு சவாலாக இருக்கலாம்.
உயர் இரத்த சர்க்கரை உள்ளவர்கள் தங்கள் இனிப்பு சாப்பிடுவதை கணிசமாகக் குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல உணவுகளை தவிர்க்கலாம். அதிலும் அவர்கள் இனிப்பு பிரியர்களாக இருந்தால் உண்மையில் கைவிட வேண்டுமா என்ற ஏக்கம் அவர்கள் மனதில் இருக்கும். அதே சமயம் அதிக இரத்த சர்க்கரை உள்ளவர்கள் இரவு உணவிற்குப் பிறகு ஐஸ்கிரீம் போன்ற இனிப்புகளை சாப்பிடலாமா என்ற கேள்வியும் இருக்கும்.
நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தினால் ஐஸ்கிரீமை சாப்பிடலாம். இதில் சூப்பர்-சர்க்கரை டாப்பிங்ஸ் கலவையில் சேர்க்கப்படாமல் இருக்கும், ஐஸ்கிரீம் ஒரு சிறந்த விருந்தாக இருக்கும். ஆனால் நீரிழிவு நோயாளிகள் ஐஸ்கிரீம் சாப்பிடும் போது மற்ற சூப்பர்-சர்க்கரை பொருட்களை சாப்பிடக்கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
எனவே நீங்கள் உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறீர்கள் என்றால், நீங்கள் நிச்சயமாக சில ஐஸ்கிரீமை சாப்பிடலாம். ஆனால் நீங்கள் “கொழுப்பு இல்லாத ஐஸ்கிரீமைத் தேர்ந்தெடுப்பது நல்லது. ஏனெனில் கொழுப்பு இரத்த சர்க்கரை அதிகரிப்பின் அபாயத்தைக் குறைக்க உதவும். சர்க்கரை உட்கொள்ளும் போது அதை மிகைப்படுத்தாமல் இனிப்பு சுவையை அனுபவிக்கலாம்.
அந்த வகையில் நீரிழிவு நோயாளிகள் சாப்பிட தகுந்த 4 வகையான ஐஸ்கிரீம்கள்
ஹாலோ டாப்
“6 கிராம் மட்டுமே சேர்க்கப்பட்ட சர்க்கரையுடன், தயாரிக்கப்படும் இந்த ஐஸ்கிரீம் இரத்த சர்க்கரையை நிர்வகிப்பவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாகும். மேலும் இந்த ஐஸ்கிரீமில் உள்ள புரதம் மற்றும் கொழுப்பின் கலவையானது இனிப்பு மற்றும் ஐஸ்கிரீம் சாப்பிட்ட திருப்தியை ஆதரிக்கும் மற்றும் இரத்த சர்க்கரையை இன்னும் அதிகமாக நிர்வகிக்கலாம். மிக முக்கியமாக, இந்த ஐஸ்கிரீம் முற்றிலும் சுவையாக இருக்கிறது.
யாசோ பார்கள்
“தொழில்நுட்ப ரீதியாக, இந்த பார்கள் உறைந்த தயிரைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன, ஆனால் அவை ஐஸ்கிரீம் சாப்பிடுவதைப் போலவே திருப்திகரமாக உள்ளன. இந்த பார்களில் உள்ள புரதத்திற்கு, அவற்றை சாப்பிடுவதன் மூலம் இரத்த சர்க்கரையை சிறப்பாக நிர்வகிக்க முடியும். இதில் கிளாசிக் ஃபட்ஜ் பட்டியில் 15 கிராமுக்கு குறைவாக உள்ளது. மொத்த கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சரியான பரிமாறும் அளவைக் தேர்வு செய்வது சற்று கடினமாக இருக்கலாம்.
சோலியின் சாக்லேட் வேர்க்கடலை வெண்ணெய் ஓட் பாப்ஸ்
“இந்த க்ளோயின் பார்களில் 10 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன மற்றும் அவை முற்றிலும் பால் இல்லாதவை. மேலும், இரத்த சர்க்கரையை நிலைநிறுத்த உதவும் புரதம் மற்றும் நார்ச்சத்தும் இதில் உள்ளது, மேலும் ஒவ்வொரு பாப் பகுதியும் பிரிக்கப்பட்டுள்ளது, அதனால் அதிகமாக உட்கொள்ளும் ஆசை ஏற்படாது..
இன்லிஜென்ட் ஐஸ்கிரீம்
இந்த வகை ஐஸ்கிரீமில் 10 கிராம் நிகர கார்போஹைட்ரேட் மற்றும் 7 கிராம் சர்க்கரை மட்டுமே உள்ளது, இந்த சுவையான விருந்தை உருவாக்க பயன்படுத்தப்பட்ட மாற்று இனிப்புகள் பாரம்பரிய ஐஸ்கிரீமை விட அதிக புரதம் மற்றும் குறைவான சர்க்கரையுடன் இருப்பதால், இரத்த சர்க்கரையை நிர்வகிப்பதில் கவனம் செலுத்துபவர்களுக்கு ஒரு நல்ல வழி.
மேற்கண்ட தகவல்களை எம்.எஸ்., ஆர்.டி.என், தி ஃபர்ஸ்ட் டைம் மாம்ஸ் ப்ரெக்னென்சி குக்புக் மற்றும் ஃபுயூலிங் ஆண் ஃபெர்ட்டிலிட்டியின் ஆசிரியர் லாரன் மேனேக்கர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“