சருமம், இதயம், நுரையீரல் என அனைத்திற்கும் வைட்டமின் இ நிறைந்த உணவுகள் சிறந்தது. வைட்டமின் ஈ கொழுப்பில் கரையக்கூடியது. வைட்டமின் ஈ இறைச்சி, முட்டை, பழங்கள், தாவர எண்ணெய்கள் மற்றும் தானியங்கள் உள்ளிட்ட பல்வேறு உணவுகளில் இருக்கிறது. தினசரி உணவில் வைட்டமின் இ எடுத்துக் கொள்வது நல்லது. இயற்கை உணவுகள் மூலம் தினசரி தேவையை பூர்த்தி செய்வது சிறந்தது. வைட்டமின் இ அத்தியாவசியமாகும். வைட்டமின் இ
நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை கொடுக்கிறது.
சருமத்திற்கு வைட்டமின் இ நன்மைகள்
- இயற்கை மாய்ஸ்சரைசர்
வைட்டமின் இ, சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க உதவுகிறது. இதில் டோகோட்ரியினால்கள், டோகோபெரோல்கள் நிறைந்துள்ளன. வைட்டமின் இ ஒரு அற்புதமான இயற்கை மாய்ஸ்சரைசர் ஆகும். வறண்ட சருமம் உள்ளவர்கள் வைட்டமின் இ நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். வைட்டமின் இ எண்ணெயைக் கொண்டு உங்கள் சருமத்தை மசாஜ் செய்து அதன் மேஜிக்கை உணரலாம்.
- பொலிவான சருமம்
வைட்டமின் இ ஃப்ரீ ரேடிக்கல்களைத் தடுக்கிறது. இதனால் சருமம் பொலிவாக தோற்றமளிக்கிறது.
- சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது
புற ஊதா கதிர்கள் சருமத்திற்கு நிறைய சேதத்தை ஏற்படுத்தும், எனவே அவற்றிலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாப்பது முக்கியம். புற ஊதா கதிர்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க வைட்டமின் இ உதவுகிறது. எப்போதும் பிரகாசமாக வைக்க உதவுகிறது.
முடி வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின் இ
- முடி வளர்ச்சியை அதிகரிக்கும்
முடி கொத்து கொத்தாக உதிர்வதைப் பார்ப்பது எவருக்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும், ஆனால் உண்மை என்னவென்றால், முடி உதிர்தல் இப்போது உலகளாவிய பிரச்சனையாகிவிட்டது. இது எல்லா வயதினரையும் பாதிக்கிறது, ஆனால் சில சமயங்களில் முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், முடி உதிர்வதைத் தடுக்கவும் ஒருவர் எடுக்கக்கூடிய சிறந்த நடவடிக்கை ஆரோக்கியமான உணவுகளை நமது உணவில் சேர்த்துக்கொள்வதாகும். வைட்டமின் இ-யில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது, இது செல் சேதத்தை குறைக்க உதவுகிறது. முடி வளர்ச்சியை தூண்டுகிறது.
- உச்சந்தலையில் முடி வளர்ச்சி
வைட்டமின் இ-யின் சிறந்த நன்மைகளில் ஒன்று, இது உச்சந்தலையில் இரத்த விநியோகத்தை அதிகரிக்கிறது, இது முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. தலைமுடி வலுவாகவும், ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது.
ஒரு நாளைக்கு எவ்வளவு வைட்டமின் இ எடுக்க வேண்டும்?
இது ஒவ்வொரு தனிநபர்களுக்கும் வேறுபடும். பெரும்பாலும் வைட்டமின் இ நாம் தினசரி உட்கொள்ளும் உணவிலேயே கிடைக்கிறது.
தேசிய சுகாதார நிறுவன தரவு படி, வைட்டமின் இ தினசரி அளவு
வயது மற்றும் தினசரி தேவை
0-6 மாதங்கள் - 4 மி.கி
7-12 மாதங்கள் - 5 மி.கி
1-3 வயது - 6 மி.கி
4-8 வயது - 7 மி.கி
9-13 வயது - 11 மி.கி
14+ வயது - 15 மி.கி, 15 மி.கி(கர்ப்பிணிகள்), 19 மி.கி (பாலூட்டும் தாய்மார்கள்)
வைட்டமின் இ உள்ள இயற்கை உணவுகள்
உங்கள் உணவில் நீங்கள் சேர்க்க வேண்டிய வைட்டமின் இ கொண்ட சில உணவுகள்
சூரியகாந்தி விதைகள்
பாதாம்
ப்ரோக்கோலி
கிவி
மாங்காய்
தக்காளி
வேர்க்கடலை
அவகேடோ
பாதாம் எண்ணெய்
பிரேசில் நட்ஸ்
டர்னிப் கீரை
இறால்
மீன் ரோய்
சிவப்பு இனிப்பு மிளகு
சூரியகாந்தி எண்ணெய்
வைட்டமின் இ பல ஆரோக்கிய நன்மைகளை அளித்தாலும், அதிகமாக உட்கொள்வது பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் என கூறுகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil