வீட்டில் தினமும் ஒரு சின்ன கிச்சன் டிப்ஸ் ஃபாலோ பண்ணாலே போதும் சமையல் செய்து அசத்தலாம். நான்வெஜ் சமைப்பது முதல் வெஜ் சமையல் வரை சமையலில் பின்பற்ற வேண்டிய சிம்பிள் டிப்ஸ்கள் பற்றி பல்லாண்டு வாழ்க டிப்ஸ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
டிப்ஸ் 1: ஆட்டுக்கறி, கோழிக்கறி சமைக்கும் பொது சில துளி எலுமிச்சை சாறு சேர்த்து வேக வைத்தால் கரி பஞ்சு போல் வெந்துவிடும். குழந்தைகளுக்கு சாப்பிடவும் ஈசியாக இருக்கும்.
டிப்ஸ் 2: கூட்டு சமைக்கும் போது உளுந்து தாளிப்பை விட நிலக்கடலையை வறுத்து அரைத்து சேர்த்தால் சுவை அதிகமாக இருக்கும்.
டிப்ஸ் 3: சட்னி அரைக்கும் போது பச்சை மிளகாய் நறுக்கி போட்டால் நன்றாக இருக்கும். முழுதாக போட்டால் அதில் புழுக்கள் இருந்தால் அதுவும் அரைபட்டு சட்னி கசப்பாகிவிடும். அதனால் எப்போதும் நறுக்கிய பச்சை மிளகாய் சட்னியில் சேர்க்கலாம்.
தினமும் ஐந்து சமையல் குறிப்புகள்
டிப்ஸ் 4: கீரை மசியல் செய்யும்போது சாதம் வடித்த கஞ்சியை விட்டு மசித்தால் நன்கு குழைவாக மசியும்.
டிப்ஸ் 5: எப்போதும் ஒரே மாதிரியாக இட்லி சாப்பிடாமல் நல்லெண்ணையில் கடுகு, கருவேப்பிலை, பெருங்காயம் எல்லாம் சேர்த்து தாளித்துக் கொட்டி இட்லி சாப்பிட்டால் இன்னும் அதிகமாக சாப்பிட தோன்றும். சுவையும் நன்றாக இருக்கும்.லஞ்ச் -க்கு குழந்தைகளுக்கு கொடுத்து அனுப்பலாம்.