வீட்டில் சமைக்கும் போது ஒரு சில டிப்ஸ் பாலோ பண்ணாலே போதும். சமையலுக்கும் சுவையாக இருக்கும். அதுமாதிரியான கிச்சன் டிப்ஸ் சிலவற்றை பற்றி பல்லாண்டு வாழ்க டிப்ஸ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
டிப்ஸ் 1: நீர் மோரில் இஞ்சி, பச்சை மிளகாய் சேர்ப்பதற்கு பதிலாக சிறிதளவு மிளகு, சீரகத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
டிப்ஸ் 2: பிளாஸ்க்ல டீ காபி ஊற்றும்போது சூடு நிறைய நேரம் இருப்பதற்கு இரண்டு இன்ச் குறைவாக பிளாஸ்க்ல டீ, காபி ஊற்றலாம். நீண்ட நேரம் சூடாக இருக்கும்.
தினமும் ஐந்து சமையல் குறிப்புகள் #food #everydaytips #cooking #tamil #hometips #recipe #cookingtips
டிப்ஸ் 3: பிரிட்ஜில் வைத்து எடுத்த பாயாசத்தை மீண்டும் சுடுபடுத்தும் போது நேரடியாக சூடு படுத்தாமல் வேறு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி டபுள் பாய்லிங் மெத்தடில் சூடு செய்தால் சுவை குறையாமல் புதிதாக செய்தது போல் ருசியாக இருக்கும்.
டிப்ஸ் 4: புளியோதரைக்காக குக்கரில் சாதம் வைக்கும் போது நான்கு டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு வைத்தால் அரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்.
டிப்ஸ் 5: கருவேப்பிலை பொடி, புதினா பொடி, கொத்தமல்லி போன்ற பொடி சாதங்கள் கிளறும் போது சிறிது எலுமிச்சை பழம் சாறு சேர்த்தால் சாதம் பச்சையாக டிவியில் காட்டுவது போல் பளபளப்பாக இருக்கும் சுவையும் கூடுதலாக இருக்கும்.