ஆப்பிள், கீரை… நீரிழிவு நோயாளிகள் பலம் பெற டாப் 5 உணவுகள் இவை!

சர்க்கரை நோய் இருப்பவர்கள் நாம் சாப்பிடும் உணவில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். எந்த உணவை தேர்வு செய்ய வேண்டும் என்று பொதுவாக குழப்பம் ஏற்படுவது இயல்புதான். இதை பற்றி சிந்தித்து கவலைப் பட தேவையில்லை. சக்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவுகளில் டாப் 5 உணவை பற்றிதான் பார்க்க போகிறோம்.

சர்க்கரை நோய் இருப்பவர்கள் நாம் சாப்பிடும் உணவில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். எந்த உணவை தேர்வு செய்ய வேண்டும் என்று பொதுவாக குழப்பம் ஏற்படுவது இயல்புதான். இதை பற்றி சிந்தித்து கவலைப் பட தேவையில்லை. சக்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவுகளில் டாப் 5 உணவை பற்றிதான் பார்க்க போகிறோம்.

ஆப்பிள்

நீங்கள் சக்கரை நோயால் பாதிக்கப்பட்டால் உங்கள் உணவில் பழங்களுக்கு இடமில்லை என்று நினைக்கலாம். ஆனால் அப்படி அல்ல. ஆப்பிள் பழத்தில் குறைந்த கிளைஸிமிக் இன்டக்ஸ் இருப்பதால் ரத்தத்தில் சக்கரை அளவை குறைக்கும். நார்சத்து, வைட்டமின் சி, ஆப்பிளில் இருக்கும் அதேவேளையில் சுத்தமாக கொழுப்பு சத்து இல்லை.

பாதாம்

இதில் மெக்னிஷியம் அதிகம் இருக்கிறது. இதில் இருக்கும் மின்சரல்ஸ் உடலில் உள்ள இன்சுலினை பயனுள்ளதாக பயன்படுத்த உதவுகிறது. இதில் இருக்கும் புரத சத்து, நார்சத்து குளுகோஸ் அளவை ரத்தில் சீராக்க உதவுகிறது.

கீரை

கீரையில் குறைந்த கெலோரிகள் இருக்கிறது. இதில் மெக்னீஷியம், நார்சத்து இருப்பதால் இது சக்கரை நோயாளிகள் அதிகமாகவே சாப்பிடலாம். மேலும் பாலக் பன்னீர் போன்ற உணவு வகைகளை சாப்பிட்டால் உடலுக்கு நன்மை கிடைக்கும்.

சியா சீட்ஸ்

உடல் எடையை குறைப்பதற்கு சியா சீட்ஸ் உதவுகிறது. இதில் இருக்கும் நார்ச்சத்து, புரத சத்து, கால்சியம் உடலுக்கு அதிக நன்மைகள் அளிக்கிறது. சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சியா சீட்ஸ் சாப்பிடும்போது, உடல் எடை குறைவதாக ஆய்வுகள் கூறுகிறது.

மஞ்சள்

மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்ற பொருள், கணையத்தை அரோக்கியமாக்குகிறது. இது சக்கரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது.  

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Top 5 foods for diabetes people