மாதவிடாய் காலத்தில் பெண்கள் அனுபவிக்கும் வலி மற்றும் அசௌகரியங்கள் பல நேரங்களில் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும். புதுயுகம் சேனலுக்கு டாக்டர் உஷாநந்தினி அளித்த பேட்டியில் மாதவிடாய் வலியை குறைக்க உதவும் சில முக்கியமான உணவுப் பழக்கங்களைப் பற்றி விளக்குகிறார். சரியான உணவு முறையைப் பின்பற்றுவதன் மூலம் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை கணிசமாக குறைக்க முடியும் என்பதை அவர் எடுத்துரைக்கிறார்.
Advertisment
மாதவிடாய் வலி ஏற்படுவதற்கு புரோஸ்டாக்லாண்டின் (Prostaglandin) எனப்படும் ஒரு வேதிப்பொருள் முக்கிய பங்கு வகிக்கிறது. சில குறிப்பிட்ட உணவுகள் இந்த புரோஸ்டாக்லாண்டின் உற்பத்தியைக் குறைத்து, வலியின் தீவிரத்தை குறைக்க உதவுகின்றன. அந்த வகையில், அழற்சி எதிர்ப்புப் பண்புகள் கொண்ட உணவுகளை உட்கொள்வது மாதவிடாய் வலியை குறைக்க ஒரு சிறந்த வழியாகும். இத்தகைய உணவுகள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து வலியை தணிக்கின்றன.
முக்கிய உணவுகள் மற்றும் அவற்றின் பயன்கள்:
எள் தண்ணீர் - இரவு நீரில் ஊறவைத்து காலையில் குடிக்கலாம். வாழைப்பழம் - பொட்டாசியம், மெக்னீசியம் வயிறு வலி உப்பசத்தை குறைக்கும் கருப்பு திராட்சை பேரிச்சம்பழம் நெல்லிக்காய்
Advertisment
Advertisements
வைட்டமின் ஈ சத்து நிறைந்த உணவுகளும் மாதவிடாய் வலிக்கு நிவாரணம் அளிக்கின்றன. நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உடல் வலியை குறைக்க உதவுகின்றன. மேலும், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது மாதவிடாய் காலத்தில் ஏற்படும் மனநிலை மாற்றங்களை கட்டுப்படுத்த உதவுகிறது.
வைட்டமின் பி6 சத்தும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு மிகவும் அவசியமானது. இது மனநிலை மாற்றங்கள் மட்டுமின்றி, வலியையும் குறைக்க உதவுகிறது. அதேபோல், வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகள் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உடல் வலியை குறைக்க உதவும் என்றும் டாக்டர் கூறுகிறார்.
எனவே, மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை மேற்கொள்வது மிகவும் முக்கியம். அழற்சி எதிர்ப்புப் பண்புகள், வைட்டமின் ஈ, பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் மாதவிடாய் வலியை கணிசமாக குறைக்க முடியும்.
மேற்குறிப்பிட்ட 5 உணவுகள் மற்றும் இந்த சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும் வலியை குறைக்க முடியும் என டாக்டர் உஷா நந்தினி கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.