உலகின் சிறந்த உணவுகள் கிடைக்கும் இடங்கள் மற்றும் சிறந்த உணவுகளின் பட்டியலை டேஸ்ட் அட்லஸ் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் நகரங்களும் இடம்பெற்றுள்ளன. அந்த பட்டியலில் மேற்கு வங்கம்மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
உலகிலேயே சிறந்த உணவுகளைக் கொண்ட இடங்களின் டாப் 100 பட்டியலில் தென்னிந்திய உணவுகளுக்கு 59ஆவது இடம் கிடைத்துள்ளது. டேஸ்ஸ்ட் அட்லஸ் நடத்திய சர்வேயில் இத்தாலியில் உள்ள கம்பானியா பகுதியின் உணவு முதலிடத்தில் உள்ளது.
இந்த பட்டியலில் பஞ்சாப்பின் உணவுகள் 7ஆவது இடத்தையும், மகாராஷ்டிரா உணவுகள் 41ஆவது இடத்தையும், மேற்கு வங்கத்தின் உணவுகள் 54ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
டேஸ்ட்அட்லஸ் பட்டியலின் படி, இந்திய உணவு வகைகள் 12வது இடத்தைப் பிடித்திருந்தாலும், பல இந்திய உணவுகள் உலகின் 100 சிறந்த உணவுகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
அதில் முர்க் மக்கானி (பட்டர் சிக்கன்)29வது இடத்திலும், ஹைதராபாத் பிரியாணி 31வது இடத்திலும் உள்ளது. மேலும் இந்த பட்டியலில் அமிர்தசாரி குல்ச்சா, பட்டர் கார்லிக் நான் போன்ற இந்திய உணவுகளும் டேஸ்ட் அட்லஸ் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
அதேபோல தலைசிறந்த உணவுகளை வழங்கும் நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் 5 நகரங்கள் இடம்பெற்றுள்ளது. அதிலும் மும்பை 5ஆவது இடத்தில் உள்ளது. அதேபோல டெல்லி, அம்ரிதசரஸ், கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் சென்னையும் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
சென்னையில் குறிப்பாக இட்லி, தோசை, சாம்பார், மசாலா தோசை, சர்க்கரை பொங்கல், தேங்காய் சட்னி, முறுக்கு, போண்டா உள்ளிட்டவை சிறந்த உணவாக பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“