Top immunity booster foods for monsoon in Tamil: நமது ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய வெளிப்புற நுண்ணுயிரிகளுக்கு எதிராக நமது நோயெதிர்ப்பு அமைப்பு நம்மை பாதுகாக்கிறது. வலுவான நோயெதிர்ப்பு அமைப்பு இருந்தால், நாம் உடல் தொற்று போன்றவற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
பருவமழையின் போது, வானிலை காரணமாக நம் உடல்கள் தொற்று மற்றும் பிற நோய்களுக்கு ஆளாகின்றன. ஈரப்பதம் மற்றும் வெப்பமான காலநிலை நோயை உண்டாக்கும் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏற்றது. எனவே, மழைக்காலத்தில் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிப்பது இன்னும் முக்கியமானது.
இதையும் படியுங்கள்: புற்றுநோய் முதல் சர்க்கரை நோய் வரை… ஒரே தீர்வு இந்த பழத்தில் இருக்கிறது
அதிக ஊட்டச்சத்து மதிப்புமிக்க உணவுகள் நம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். அவை நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பருவமழையின்போது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விரும்பினால், உடனடியாக உங்கள் உணவில் சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள் எவை என்பதை பார்ப்போம்.
இஞ்சி
இந்தியாவில் அறியப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மிகச் சிறந்த உணவுப் பொருட்களில் இஞ்சியும் ஒன்றாகும். இஞ்சியை பல்வேறு உணவுகளிலும், சூடான தேநீரிலும் சேர்த்து உட்கொள்ளலாம், இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் மேம்படுத்தும்.
மஞ்சள்
இஞ்சியைப் போலவே, மஞ்சள் அதன் பல நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன்களுக்கு அறியப்படுகிறது. இந்த வைரஸ் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு மசாலாவான மஞ்சள் பருவமழையில் பரவும் நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
பூண்டு
இஞ்சியைப் போலவே, பூண்டு இந்திய மற்றும் தெற்காசிய உணவு வகைகளில் பொதுவாக உட்கொள்ளப்படுகிறது. இது ஆண்டிபயாடிக், வைரஸ் எதிர்ப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது.
வெந்தய விதைகள்
வெந்தய விதைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு அறியப்படுகின்றன, மேலும் நமது ஆற்றலையும் அதிகரிக்கின்றன. வெந்தய விதைகளை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் மழைக்காலங்களில் ஏற்படும் செரிமான பிரச்சனைகளை தீர்க்கலாம்.
மாதுளை
மாதுளையில் பல்வேறு சத்துக்கள் அதிகம் மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மாதுளையை உட்கொள்வது நமது செரிமான அமைப்பு மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் பிற நாட்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil