சில பழங்கள் மற்றும் காய்கறிகள் ஒரு குறிப்பிட்ட சீசனில் மட்டுமே விளைச்சல் அதிகம் இருக்கும். உதாரணமாக, மாம்பழம் கோடை காலத்தில் மட்டுமே கிடைக்கும். எனவே இப்போவே சுவையான மாங்காய் துவையல் செய்து சாப்பிடுங்கள். மாங்காய் துவையல் எப்படி செய்வது என்று ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடலைப்பருப்பு, உளுந்து பருப்பு, வெந்தயம், தனியா, கடுகு, சீரகம் சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். அடுத்து பூண்டு சேர்த்து வறுக்கவும். பின்பு ஒரு தட்டிற்கு மாற்றி ஆறவிடவும்.
அதே பானில் சிவப்பு மிளகாய் சேர்த்து வறுக்கவும். தட்டிற்கு மாற்றி ஆறவிடவும். ஆறிய பிறகு மிளகாயின் காம்பை எடுத்து விடவும். மிக்ஸர் ஜாரில் வறுத்த மிளகாய், வறுத்த மற்ற பொருட்கள், கல்லுப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
நறுக்கிய மாங்காய் துண்டுகளை சேர்த்து தண்ணீர் இன்றி மீண்டும் கொரகொரப்பாக அரைக்கவும். தாளிப்பு செய்ய சிறிய பானில் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், இடித்த பூண்டு சேர்த்து வறுக்கவும்.
அடுத்து அடுப்பை அணைத்து விட்டு சிவப்பு மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் மாங்காய் துவையலுடன் சேர்த்து கலந்து விடவும். சாதம், இட்லி, தோசை உடன் பரிமாற சுவையான மாங்காய் துவையல் தயார்.