scorecardresearch

பச்சை மிளகாய் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? மாரடைப்பு, கொலஸ்ட்ராலையும் தடுக்கலாம்

பச்சை மிளகாயில் வெறும் காரம்தான் இருக்கிறது என்று நாம் நினைப்போம். இந்நிலையில் இதில் அதிக சத்துக்கள் இருக்கிறது. இதில் வைட்டமின் பி6, வைட்டமின் ஏ, இரும்பு, காப்பர், பொட்டாஷியம் சத்து இருக்கிறது.

பச்சை மிளகாய்
பச்சை மிளகாய்

பச்சை மிளகாயில் வெறும் காரம்தான் இருக்கிறது என்று நாம் நினைப்போம். இந்நிலையில் இதில் அதிக சத்துக்கள் இருக்கிறது. இதில் வைட்டமின் பி6, வைட்டமின் ஏ, இரும்பு, காப்பர், பொட்டாஷியம் சத்து இருக்கிறது.

பச்சை மிளகாயில் குறைந்த கலோரிகள் இருக்கிறது, இது உடல் எடை குறைக்க உவுகிறது. இது நம் உடலில் உள்ள கூடுதல் கொழுப்பை கரைக்கும். 15 கிராம் பச்சை மிளகாயில்  வெறும் 6 கலோரிகள் உள்ளது.

மாரடைப்பு வராமல் பார்த்துகொள்ளும், மேலும் பக்கவாதத்தையும் தடுக்கும்.  குறுப்பாக கொல்ஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவை குறைக்கிறது. இதுபோல ரத்த அழுத்தம் மற்றும் அதிக இதயத்துடிப்பை பச்சை மிளகாய் குறைக்கிறது. இயற்கையாக ஏற்படும் ரத்த உரைவை தடுக்கும் செயல் முறையை அதிகப்படுத்துகிறது.

இதில் நார்சத்து இருப்பதால், குடலை சுத்திகரித்து, உடலை விட்டு வெளியே நச்சுகளை அனுப்பும், மேலும் தினசரி வயிற்றின் செயல்பாடுகளுக்கு உதவும்.

இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட் வைட்டமின் சி, கொலஜன் உற்பத்தி செய்ய உதவுகிறது. மேலும் இதில் இருக்கும் வைட்டமின் இ,-யில் சருமத்திற்கு தேவையான இயற்கையான எண்ணெய் தன்மையை உருவாக்குகிறது.  இதனால் முகப்பரு, தோல் அலர்சி, தோல் சுருக்கம் ஆகியவற்றை குணப்படுத்தும்.

பச்சை மிளகாயில் சிலிக்கான் இருக்கிறது. இந்த சிலிக்கான் தலைமுடிகளின் வேர்களுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது கூந்தல் வளர்ச்சியை  தூண்டும் மேலும் நமது தலைமுடியின் பாலிக்கில்ஸை அது பாதுகாக்கும்.

காப்சைசின் என்ற பொருள் பச்சை மிளகாயில் உள்ளது. அது சளி மற்றும் இருமலை குணப்படுத்த உதவுகிறது. சளி, இருமலின்போது, உடல் உள்ள வெப்ப நிலையை குறைக்க, நமது மூளையின் ஹைப்போதளமல்-யில் உள்ள குளிர்மையான இடங்களை தூண்டிவிடுகிறது.

ஒரு பச்சை மிளகாயில் 1 கலோரிதான் இருக்கிறது. 0.1 கிராம் புரத சத்து, 0.1 கிராம் கொழுப்பு சத்து, 0.2 கிராம் கார்போஹைட்ரேட், 0.1 கிராம் நார்சத்து இருக்கிறது. பச்சை மிளகாயில் உள்ள காப்சைசின்  நமது மெட்டபாலிசத்தை அதிகப்படுத்துகிறது. பசி குறைவாக எடுக்கிறது. இதனால் குறைந்த கலோரிகளை நாம் எடுத்துகொள்வோம். இதனால் உடல் எடை குறைகிறது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: True or false green chillies not only spice up meals