வெயில் காலத்தில் மாம்பழத்தை வைத்து இந்த சூப்பரான ஸ்டிக்கி ரைஸ் செய்து பாருங்க. இந்நிலையில் இந்த உணவு,வகை இன்ஸ்டிராகிராமில் அதிக பிரபலமாக உள்ளது. சைவம் சாப்பிடும் நபர்களுக்கு இது ஒரு நல்ல மாற்றாக அமையும்.
தேவையான பொருட்கள்
¾ கப்- அரிசி
¾ கப் – தேங்காய் பால்
¼ கப் – தேங்காய் பால்
உப்பு
கன்டன்ஸ்ட் பால்; 4 டேபிள் ஸ்பூன்
½ டேபிள் ஸ்பூன் தாழம்பூ எசன்ஸ்
செய்முறை: அரிசியை நன்றாக ஊற வைக்க வேண்டும். தொடர்ந்து தண்ணீர் நீக்கிவிட்டு, தேங்காய் பாலில் அரிசியை நன்றாக 20 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். அதில் கன்டன்ஸ் பாலை ஊற்றி கிளர வேண்டும் தொடர்ந்து தேங்காய் பால் ஊற்றி, கடைசியாக ஒரு டேபிள் ஸ்பூன் கண்டன்ஸ் பாலை உற்றவும்.
மாம்பழங்களுடன் ஸ்டிக்கி ரைஸை சேர்த்து பரிமாறவும். இதில் மாம்பழங்கள் மூலம் வைட்டமின் சி கிடைக்கிறது. மேலும் இதில் வைட்டமின் ஏ, போலேட், நார்சத்து இருப்பதால் பெருங்குடல் புற்று நோய் ஏற்படாது. இந்த டிஸ்க்கு மேலே வறுத்த எள்ளை தூவலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“