scorecardresearch

இந்த உணவுகளில் அவ்ளோ புரோட்டீன் இருக்கு: மிஸ் பண்ணாம சாப்பிடுங்க

பிரக்கோலி மற்றும் கீரையில் அதிக புரத சத்து இருக்கிறது. இவை ஒரு நாளைக்கு தேவையான புரத சத்து தேவையை பூர்த்தி செய்கிறது.

இந்த உணவுகளில் அவ்ளோ புரோட்டீன் இருக்கு
இந்த உணவுகளில் அவ்ளோ புரோட்டீன் இருக்கு

நமது உடலின் செயல்பாட்டிற்கு புரத சத்து நிறைந்த உணவுகளை நாம் எடுத்துக்கொண்டே ஆக வேண்டும். புரத சத்து குறைபாடு உள்ளவர்கள் நிச்சயம் மருத்துவரிடம் சென்று, அதற்கான வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். இந்நிலையில் இத்தோடு இந்த உணவுகளையும் நாம் தேர்வு செய்ய முடியும்.

சோயா: இதில் புரத சத்து அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக 100 கிராம் சோயாவில் 52 கிராம் புரத சத்து இருக்கிறது. மேலும் இதில் கால்சியம், ஐசோபிளாபோன்ஸ் இருக்கிறது.

பிரக்கோலி மற்றும் கீரையில் அதிக புரத சத்து இருக்கிறது. இவை ஒரு நாளைக்கு தேவையான புரத சத்து தேவையை பூர்த்தி செய்கிறது.

சியா விதைகள்: இதை சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்று நமக்கு தெரியும். இந்நிலையில் இதில் புரோட்டீன் சத்து உள்ளது. மேலும் இது ஒமேகா 3 பேட்டி ஆசிட் மற்றும் நார்சத்து கொண்டது.

கீன்வா ( quinoa) இது ஒரு வகை தானியங்களில் ஒன்று. இந்நிலையில் இதில் புரத சத்துடன் நார்சத்து சேர்ந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

ராஜ்மா, கொண்டைக்கடலை மற்றும் பருப்பு வகைகளில் புரத சத்து கொட்டிக்கிடக்கிறது.

பச்சை பட்டாணியிலும் புரோட்டீன் சத்து உள்ளது. மேலும் இதில் மெக்னிசிஷியம், விட்டமின் ஏ, சி. கே நார்சத்து மற்றும் போலேட் உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Try these protein rich food healthy life

Best of Express