/tamil-ie/media/media_files/uploads/2023/01/1602692960_pjimage-1.jpg)
நாம் சலிக்கப்பட்ட மாவை சாப்பிடும்போது, கொலஸ்ட்ரால் ஏற்படும் வாய்ப்பு மிகவும் அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது.
சலிக்கப்பட்ட அனைத்து வகையான மாவும், அது கோதுமை மாவாக இருந்தாலும்,இதய ஆரோக்கியத்திற்கு அதிக கெடுதல் விளைவிக்கிறது. சலிக்கப்பட்ட மாவால் இதயத்தில் உள்ள ரத்த குழாய்களில், கொழுப்பு படிய தொடங்கும். இந்த கொழுப்பால் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, இதய நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
சலிக்கப்பட்ட மாவை சாப்பிடுவதும்,சர்க்கரை, எண்ணெய் அதிகமாக பயன்படுத்தும் அளவிற்கு அபாயமானது. மேலும் ஆண்களுக்கு 55 வயதிலும், பெண்களுக்கு 65 வயதிற்கு முன்பாகவே, ரத்த கூழாய்களில் கொழுப்பு படியும் நிலை வரலாம். இதுபோல நீங்கள் தானிய வைகளை சாப்பிடலாம். ஆனால் அதையும் சலித்து சாப்பிட்டால், எந்த பயனும் இல்லை.
உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் அதிகபடியாக சலிக்கப்பட்ட தானிய வகைகளை சாப்பிடுகின்றனர். இந்த போக்கு மாறவேண்டும் என்றும் முழு தானிய வகைகளை சாப்பிடுவதை நாம் ஊக்குவிக்க வேண்டும்.
மேலும் நாம் கோதுமையாக இருந்தாலும் சரி மற்றும் தானிய வகைகளை அரைக்கும்போது அதன் தோலை சலிக்ககூடாது. அப்படி சலிக்காத மாவை நாம் பயன்படுத்த வேண்டும்.
மேலும் கம்பு, கேழ்வரகு, சாமை, பார்லி உள்ளிட்டவற்றை நம் சாப்பிட வேண்டும். இதுபோல குறைந்த கார்போஹைட்ரேட். அதிக புரோட்டீன். அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை நாம் சாப்பிட வேண்டும்.
இந்நிலையில் நீங்கள் கடையில் வாங்கும் கோதுமையில் உமி அல்லது தவிடு இருக்காது. இதனால் எந்த பயனும் இல்லை. எனவே நீங்களே கோதுமையை வாங்கி ரைஸ் மில்லில் கொடுத்து அரைப்பது சரியாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.