வீட்டில் எந்த கஷ்டமும் இன்றி பஞ்சு போல கேக் செய்வது எப்படி என்று பார்ப்போம். டீ போடும் சிறிது நேரத்திலேயே கேக் செய்து விடலாம்.
தேவையான பொருட்கள்:
1.5 கப் சர்க்கரை
1 டீஸ்பூன் ஏலக்காய் பொடி
2 கப் கோதுமை மாவு
1/2 டீஸ்பூன் உப்பு
1 டீஸ்பூன் பேக்கிங் சோடா
1/4 கப் எண்ணெய்
தேவைக்கேற்ப பால்
செய்முறை
ஒரு மிக்ஸி ஜாரில் சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் இதை ஒரு கப்பில் சேர்த்து அதனுடன் கோதுமை மாவு, உப்பு, பேக்கிங் சோடா எண்ணெய் சேர்த்து கலந்து விடவும்.
பின்னர் அதில் தேவையான அளவு காய்ச்சி ஆற வைத்த பால் சேர்த்து நன்கு கலந்து விடவும். இதை கட்டி இல்லாமல் கலக்க வேண்டும். கோதுமை மாவுக்கு பதிலாக மைதா மாவு பயன்படுத்தலாம். ஒரே பக்கமாக கலந்து கொள்ள வேண்டும்.
டீ போடும் நேரத்தில் கோதுமை மாவில் பஞ்சு போல கேக| Wheat Flour Cake | Tumbler Cake in Tamil | Cake
ஒரு பதத்திற்கு வந்ததும் ஒரு கிளாஸ் எடுத்து அதில் எண்ணெய் அல்லது நெய் தடவி மேலே சிறிது மாவு தூவி விட்டு அதில் எடுத்து வைத்துள்ள மாவை ஊற்றி கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் உள்ளே ரிங் மாதிரி வைத்து மேலே ஒரு தட்டு வைத்து ட்ம்ளரை உள்ளே வைத்து ஒரு பத்து முதல் பதினைந்து நிமிடம் வேக வைத்தாலே போதும் சாஃப்ட்டான கேக் வெந்து வரும்.