Advertisment

ரத்த சோகை, சுகர் இருக்கா? சுண்டைக் காயை கண்டா விடாதீங்க!

குறைந்த ஹீமோகுளோபின் உள்ளவர்களுக்கு, சுண்டைக்காய் ஒரு வரப்பிரசாதம்

author-image
WebDesk
New Update
Turkey berries

Turkey berries health benefits

பல மருத்துவ குணங்கள் நிறைந்த சுண்டைக்காய் வைட்டமின் ஏ, சி, இ போன்ற ஏராளமான சத்துக்களை உள்ளடக்கியது. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கியமான வைட்டமின் சி இதில் அதிகமாக உள்ளது. ஆரஞ்சு, கொய்யா, பப்பாளிக்கு நிகரான வைட்டமின் சி, இந்த சுண்டைக்காயில் உண்டு.

Advertisment

சுண்டைக்காய் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது.

குறைந்த ஹீமோகுளோபின் உள்ளவர்களுக்கு, சுண்டைக்காய் ஒரு வரப்பிரசாதம், ஏனெனில் அவை இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், இரத்த சோகை மற்றும் தொடர்புடைய கோளாறுகளைத் தடுக்கவும் உதவுகின்றன.

publive-image

இரும்புச்சத்து குறைபாட்டின் விளைவாக, இரத்த சோகை இந்தியாவில் ஒரு பெரிய பொது சுகாதார பிரச்னையாக உள்ளது.

இது செரிமான பிரச்சனைகளுக்கும் நல்லது, வயிற்றுப்போக்கு, அமிலத்தன்மை மற்றும் அஜீரணத்தால் ஏற்படும் வயிற்று வலி போன்ற பலவிதமான பிரச்சினைகளை தீர்க்கிறது.

சுண்டைக்காய் பொதுவாக கசப்பாக இருப்பதால், அவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், டைப்-2 நீரிழிவு நோயைத் தடுக்கவும் சிறந்தவை. சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற பொதுவான நோய்களிலிருந்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இருதய நோய்களைத் தடுக்கவும், சிறுநீரக செயல்பாட்டிற்கு உதவவும் உதவுகின்றன.

கர்ப்பமாக இருக்கும், மாதவிடாய் அல்லது மாதவிடாய் நின்ற பெண்களுக்கு, சுண்டைக்காய் இந்த பிரச்சனைகளின் பக்க விளைவுகளை எதிர்த்துப் போராட உதவும் பல நன்மைகளுடன் வருகிறது. இது வளர்சிதை மாற்றத்தை கட்டுக்குள் வைத்திருக்கிறது, மேலும் சில வகையான புற்றுநோய்களைத் தடுக்க உதவுகிறது.

சுண்டைக்காய் ஒரு இயற்கை பாக்டீரியா எதிர்ப்பு.எனவே உங்கள் அன்றாட உணவில் சுண்டைக்காய் அதிகம் சேர்த்து ஆரோக்கியமாக இருங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment