மருத்துவ குணங்கள் நிறைந்த சுண்டைக்காயை கொண்டு சுவையான சட்னி செய்முறையை சமையற்கலைஞர் தீனா தெரிவித்துள்ளார்.
இதற்கு தேவையான பொருள்கள்:
சின்ன வெங்காயம் - 1/2 கிலோ
தேங்காய் - 400 கிராம்
காய்ந்த மிளகாய் - 20
நாட்டு பூண்டு - 20
புளி - 50 கிராம்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
கடுகு - தேவையான அளவு
சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
கடலை எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
300 கிராம் பச்சை சுண்டைக்காயை உப்பு கலந்த நீரில் நன்றாக கழுவ வேண்டும். பின்னர், சுண்டைக்காயை நன்றாக இடித்து எடுத்து விட்டு மீண்டும் கழுவ வேண்டும். பின்னர், இடித்து எடுத்த சுண்டைக்காயை கடலை எண்ணெய்யில் போட்டு பச்சைத் தன்மை போகும் வரை வதக்க வேண்டும். அதன் பின்னர், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, புளி, உப்பு சேர்த்து எண்ணெய்யில் வதக்க வேண்டும். பின்னர், சுண்டைக்காயை இவற்றுடன் சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் சுவையான சுண்டைக்காய் சட்னி தயாராகி விடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“