மஞ்சள் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு அற்புதமான கிருமி நாசினி. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, கல்லீரலில் கொழுப்பு சேர்வதைத் தடுத்து, இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்திட செய்கின்றது.
மேலும் இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்த நாளங்களைத் தளர்த்தி புற்றுநோயை எதிர்த்துப் போராடிட உதவும். மன அழுத்தத்தை நீக்கி வயிறு சார்ந்த பிரச்சனைகள் மற்றும் செரிமான சக்தியை மேம்படுத்தும். மஞ்சம், மிளகு ஆகியவற்றை பொடி செய்து நல்லெண்ணெய் கலந்து உணவில் எடுத்து கொள்வதன் மூலமாக கல்லீரல் ஆரோக்கியம் மற்றும் நோய்கள் நெருங்கா வாழ்வை அடைந்திடலாம்.
இதுகுறித்து மருத்துவர் ஜெயரூபா கூறுவது பற்றி பார்ப்போம். தொடர்ந்து 48 நாட்கள் மஞ்சளை எடுத்து கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
1.கல்லீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் நன்றது. விரைவில் ஃபேட்டி லிவர் பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறந்த ஒன்றாகும். மஞ்சளில் நிறைந்திருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் ஆன்டி – இன்ஃபிளமேட்டரி பண்புகள், கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு மிகச்சரியான சிகிச்சையை அளிக்க உதவுகிறது. மஞ்சள் கல்லீரலை சுத்தப்படுத்தி, அதில் ஏற்படும் வியாதிகளை விரட்டும் தன்மை கொண்டது.
மஞ்சள் வியாதிகளை விரட்டிடும் இயற்கை மருந்து !
2.இரத்தத்தின் சர்க்கரை அளவை குறைத்து, சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.பீட்டா செல்களின் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. பீட்டா செல்கள் இன்சுலினை இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவும் ஹார்மோனை உற்பத்தி செய்ய உதவுகின்றன.
3. மலக்குடல் புற்றுநோய், வயிற்று புற்றுநோய் மற்றும் தோல் புற்றுநோய் போன்றவற்றிற்கு எதிராக போராடி, பாதுகாப்பை அளிக்கும். கீமோதெரபி சிகிச்சையை அதிக பயனுள்ளதாக மாற்றவும், இயக்கத்தில் இருக்கும் செல்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவுகிறது.
4.அதுபோக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, செரிமானம், மூளை ஆரோக்கியம் என பலவற்றிற்கு மஞ்சள் மருந்தாக உள்ளது.
சாப்பிடும் முறை: 100 கிராம் மஞ்சள், 10 கிராம் மிளகு இவற்றை பொடியாக்கி நல்லெண்ணெய் சூடாக்கி அதில் பொடியை சேர்த்து நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வர அதன் அனைத்து பயன்களும் முழுமையாக கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.