சர்க்கரை இனிப்பானதுதான், ஆனால், சர்க்கரை நொய் உள்ளவர்களுக்கு மிகவும் கசப்பான ஒன்றாகி விட்டது. சர்க்கரை நோய் என்றும் நீரிழிவு நோய் என்றும் டயாபட்டீஸ் என்றும் கூறப்படுகிற சர்க்கரை நோய் ஒரு தேசிய நோயாக மாறிக்கொண்டு வருகிறது. பலரும் 40-களை நெருங்கும்போதே சர்க்கரை நோய்க்குள் செல்கிறார்கள்.
இந்த சர்க்கரை நோய் வந்தால், கை கால் எரிச்சல், அதிக தண்ணீர் தாகம், அதிகப் பசி இருக்கும், உடல் சோர்வை அளிக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் இருக்கிறது என்றால் அதை எப்படி கட்டுப்படுத்துவது என்பதைத் தான் பலரும் யோசித்துக்க்கொண்டிருக்கிறார்கள்.
டாக்டர் அமுதா தாமோதரன் தமிழர் மருத்துவம் என்ற நிகழ்ச்சியில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கும் சர்க்கரையால் ஏற்படும் சிருநீரகப் பிரச்னையைப் போக்குவதற்கும் கொழுப்பைக் குறைப்பதற்கும் பார்லி அரிசி மிகவும் முக்கியமானது என்று கூறுகிறார்.
சுகர் பேஷன்ட்கள் எடுத்துக்கொள்ளும் மருத்துகள், மாத்திரைகள் நாளடைவில் சிறுநீரகத்தைப் பாதிப்பதாகக் கூறுகிறார். சர்க்கரை நோயால் சிறுநீரகத்தில் உள்ள நெஃப்ரான்கள் பாதிக்கப்படுகின்றன. இதைத் தடுக்க தினமும் பார்லி அரிசியை எடுத்துக்கொள்ளுங்கள், நல்ல பலன் அளிக்கும் என்று டாக்டர் அமுதா தாமோதரன் கூறுகிறார்.
சர்க்கரை நோயாளிகள் தங்கள் சிறுநீரகத்தைப் பாதுகாக்க, தினமும் இரவூ 2 ஸ்பூன் பார்லி அரிசியை தண்ணீரில் ஊறவைத்துவிடுங்கள், பிறகு காலையில் பார்லி அரிசி ஊறவைத்த தண்ணீரை அப்படியே ரவாவாகக் குடித்து விடுங்கள். இது உங்கள் சிறுநீரகப் பிரச்னையைச் சரி செய்யும் என்கிறார் டாக்டர் அமுதா தாமோதரன்.
இதையடுத்து, அந்த பார்லி அரிசியை கஞ்சியாக கொதிக்க வைத்து சாப்பிடுங்கள். இது உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். பார்லி அரிசியில் உள்ள வாட்டர் சாலிட் ஃபைபர் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இது கெட்ட கொழுப்பைக் கரைத்து வெளியேற்றுகிறது. உங்கள் சிறுநீரகம் ஆபத்தான கட்டத்துக்கு செல்லாமல் பார்லி அரிசி ஊறவைத்த தண்ணீர் குடிப்பதன் மூலம் தடுக்கலாம் என்கிறார் டாகர் அமுதா தாமோதரன்.
சுகர் பேஷண்ட்ஸ் இரவில் தினமும் 2 ஸ்பூன் பார்லி அரிசியை ஊறவைத்து, அதை காலையில் குடித்துவிடுங்கள். நீங்களே அதன் பலனைக் கண்கூடாகக் காண்பீர்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“