தென்னிந்தியாவின் தினசரி உணவுகளில் ஒன்று இட்லிதான் என்று உறுதியாகச் சொல்லலாம். இட்லி செய்வது என்பது ஒரு பெரிய பிராசஸ். அரிசி, உளுந்து ஊற வைத்து, மாவு அரைத்து, அதைப் புளிக்க வைத்து பிறகு மாவு கரைத்து பிறகு இட்லி சுட வேண்டும். சில நேரங்களில் வீட்டில் இட்லி மாவு இல்லாத போது, சிலர், கடைகளில் இட்லி மாவு வாங்கி இட்லி சுடுவது உண்டு. அப்படி கடைகளில் வாங்கப்படும் மாவில் இட்லி செய்தால், இட்லி கல்லு மாதிரி இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
அதனால், உங்கள் வீட்டில் இட்லி செய்ய மாவு இல்லாத போது, அவசரத்துக்கு கடைகளில் வாங்கிய மாவில் இட்லி செய்யும்போது, கல்லு மாதிரி இல்லாமல் இட்லி புசுபுசுனு சாஃப்ட்டா இருப்பதற்கு இங்கே சொல்கிற 2 டிப்சைப் பயன்படுத்துங்கள்.
உங்கள் வீட்டில் இட்லி செய்ய மாவு இல்லாத போது, அவசரத்துக்கு கடைகளில் மாவு வாங்கினால், அந்த மாவில் நீங்கள் உப்பு சேர்ப்பீர்கள் இல்லையா, அப்போது ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலந்து விடுங்கள்.
இரண்டாவது, இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதித்த பிறகு, இட்லி தட்டில் மாவு ஊற்றி இட்லி சுடுங்கள். இப்படி செய்யும்போது, இட்லி கல்லு மாதிரி வருவதைத் தவிர்த்து, இட்லி சாஃப்ட்டா புசுபுசுனு இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“