scorecardresearch

வாரத்திற்கு 3 முட்டை: இதய ஆரோக்கியத்திற்கு நன்மை தருமா? ஆய்வு கூறும் தகவல்

ஒரு நாளைக்கு 2 முதல் 4 முட்டை வெள்ளை கருவை சாப்பிடலாம் என்று கூறப்படுகிறது. இதய நோய் உள்ளவர்கள் ஒரு முட்டை சாப்பிட்டால் போதுமானது.

வாரத்திற்கு 3 முட்டை: இதய ஆரோக்கியத்திற்கு நன்மை தருமா? ஆய்வு கூறும் தகவல்

முட்டையில் உள்ள கொழுப்பு  இதயத்திற்கு நல்லதா? இல்லை கெட்டதா? என்ற உரையாடல் தொடந்து நடந்துகொண்டே இருக்கிறது. ஆனால் சமீபத்தில் நடைபெற்ற புதிய கிரேக்க ஆய்வில், வாரத்திற்கு 1 முதல் 3 முட்டை சாப்பிட்டால், இதயத்தை பாதிக்கும் நோய்கள் ஏற்படும் அபாயம் பாதியாக குறையும் என்று கூறப்படுகிறது.

இந்த ஆய்வில் வாரத்திற்கு ஒன்று முதல் மூன்று முட்டைகள் சாப்பிடுவதால், இதய நோய் ஏற்படும் வாய்ப்பு பாதியாக குறையும் என்று கூறப்பட்டாலும். அதற்கு அதிகமாக முட்டை சாப்பிட்டால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று கூறப்படவில்லை. இந்நிலையில் இந்தியாவை பொறுத்து இந்த பரிந்துரை மாறலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சாதாரண மனிதருக்கு முட்டை சாப்பிட்டால், இதய நோய் ஏற்படாது என்று கூறப்பட்டாலும். சர்க்கரை நோய் மற்றும் பரம்பரை நோயாக இதய நோய் உள்ளவர்களும் முட்டையை எடுத்துக்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். அதிக முட்டைகள் எடுத்துக்கொண்டால், இதயம் பாதிப்பு அதிகமாகும்.

இந்நிலையில் முட்டையில் இருக்கும் சத்துக்களை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். புரோட்டீன், மினரல்ஸ் மற்றும் கரைக்ககூடிய வைட்டமின்ஸ், நார்சத்து இருக்கிறது. வைட்டமின் பி12, செலினியம் இருப்பதால் இதயத்திற்கு நன்மை தரும். இதில் இருக்கும் பி12 வைட்டமின், ரத்த குழாய்களில் கொழுப்பு படிவதற்கு காரணமாக இருக்கும் ஹைமோசிஸ்டெயின் (homocysteine) அளவை குறைக்கிறது.

முட்டையை சாப்பிடுவதால் சதை வளர்ச்சி, உடல் எடை சீராகவைத்துகொள்ள உதவும்.  மேலும் மூளை செயல்பாட்டுக்கு உதவியாக இருக்கும்.

2018ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் வாரத்திற்கு மூன்று முட்டை மஞ்சள் கருவை சாப்பிடால் என்று கூறுகிறது.

ஒருவர் எத்தனை முட்டையை சாப்பிடலாம்?


ஒரு நாளைக்கு 2 முதல் 4 முட்டை வெள்ளை கருவை சாப்பிடலாம் என்று கூறப்படுகிறது. இதய நோய் உள்ளவர்கள் ஒரு முட்டை சாப்பிட்டால் போதுமானது.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Two to three eggs a week can reduce risk of heart disease