ரொம்பவே ஹெல்தியான உடலுக்கு வலு சேர்க்கவும் மாதவிடாய் காலங்களில் வரும் இடுப்பு வலியை சரி செய்யவும் இந்த ஒரு உளுந்து பாலை வாரம் 2 அல்லது 3 முறை எடுத்தால் போதும். உடல் வலி, இடுப்பு வலியை விரைவில் விரட்டி விடலாம். எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான் பொருட்கள்
உளுத்தம் பருப்பு
பால்
சுக்கு பொடி
ஏலக்காய் பொடி
வெல்லம்
பாலை விட உடலுக்கு வலு சேர்க்க கூடியது இந்த உளுந்து பால் இந்த டேஸ்டியான உளுந்து பால் எலும்பு வளர்ச்சிக்கு உதவும் அதுமட்டுமல்லாமல் நம் உடலை உற்சாகமாக வைத்துக் கொள்வதற்கும் உதவும்.
ஒரு குக்கரில் தேவையான அளவு உளுத்தம் பருப்பை நன்றாக கழுவி அதில் இரண்டு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் மீடியம் ஃப்ளேமில் நான்கு விசில் விட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். பருப்பு குழையாமல் பதமாக வேக வைத்து எடுத்து ஆற வைக்க வேண்டும்.
பின்னர் வேறு ஒரு பாத்திரத்தில் கால் கப் தண்ணீரில் வெல்லத்தை சேர்த்து கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வேகவைத்து ஆற வைத்திருக்கும் உளுத்தம் பருப்பை மிக்ஸியில் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ள வேண்டும். இது கூட உளுத்தம் பருப்பு வேகவைத்த தண்ணீர் மற்றும் காய்ச்சிய வெள்ளத்தை வடிகட்டி சேர்த்து கலந்துவிட வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் இந்த பாலை ஊற்றி ஒரு டீஸ்பூன் ஏலக்காய் பொடி, சுக்கு பொடி சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் வேக வைக்க வேண்டும். பின்னர் இதனுடன் காய்ச்சி ஆற வைத்திருந்த பாலை சேர்த்து சூடு செய்து சாப்பிட்டால் உளுந்து பால் ரெடி ஆகிவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“