எண்ணெய் சேர்க்காத ஆரோக்கியமான உளுந்த வடை செய்முறையை தற்போது காண்போம். இதனை முதியவர்கள் கூட சுலபமாக சாப்பிடலாம்.
ஒரு கப் அளவிற்கு உளுந்து பருப்பை நன்றாக தண்ணீரில் கழுவ வேண்டும். அதன் பின்னர், பருப்பு காய்ந்ததும் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து சிறிது வறுத்துக் கொள்ள வேண்டும். இதையடுத்து, வறுத்து எடுத்த உளுந்து பருப்பை மிக்ஸியில் அரைக்க வேண்டும்.
இந்த உளுந்த மாவுடன், அரை ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து கலக்க வேண்டும். இவற்றுடன் தேவையான அளவு மிளகு, சீரகம், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், உப்பு, இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலைகள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
இவை அனைத்தையும் போதுமான அளவு சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்த பின்னர், சுமார் 5 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இதையடுத்து, மீண்டும் இதில் சிறிதளவு ஆப்ப சோடா சேர்த்து கலக்க வேண்டும். இப்படி செய்தால் வடைக்கான மாவு தயாராகி விடும்.
இந்த மாவை வடை வடிவத்திற்கு எடுத்து, இட்லி பாத்திரத்தில் வைத்து சுமார் 3 முதல் 5 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். இதன் மூலம் எண்ணெய் சேர்க்காத ஆரோக்கியமான உளுந்த வடையை தயாரித்து விடலாம்.