எலும்பு தேய்மானம், கை, கால் வலி... ஒரே வாரத்தில் சரியாகும்: உளுந்து முட்டை ஊத்தாப்பம்
எலும்பு தேய்மானம், கை, கால் வலி போன்றவற்றில் இருந்து விடுதலை உதவும் உணவாக உளுந்து முட்டை ஊத்தாப்பம் இருக்கிறது. இந்த உணவை எப்படி டேஸ்டியாகவும், எளிதாகவும் செய்யலாம் என்று இங்குப் பார்க்கலாம்.
வேகமாக நகர்ந்து வரும் நவீன உலகில் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வரும் நமக்கு கை, கால் என உடல் முழுதும் வலி ஏற்படுகிறது. இதன் காரணமாக உடலில் இருக்கும் எலும்புகளும் தேயமானம் அடைகின்றன. இவற்றை உடனடியாக சரி செய்ய முடியாவிட்டாலும், நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் மூலம் அதனை படிப்படியாக சரி செய்யலாம்.
Advertisment
அந்த வகையில், எலும்பு தேய்மானம், கை, கால் வலி போன்றவற்றில் இருந்து விடுதலை உதவும் உணவாக உளுந்து முட்டை ஊத்தாப்பம் இருக்கிறது. இந்த உணவை எப்படி டேஸ்டியாகவும், எளிதாகவும் செய்யலாம் என்று இங்குப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
உளுந்து - ஒரு கப் முட்டை - 2 பெரிய வெங்காயம் - 1 கேரட் - 1 (துருவியது) மல்லித் தழை - சிறிதளவு மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு
Advertisment
Advertisement
நீங்கள் செய்ய வேண்டியவை
முதலில் ஒரு கப் உளுந்து எடுத்து அதனை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு, அதனை ஒரு மிக்சியில் போட்டு அரைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும்.
பின்னர், அந்த மாவுடன் 2 முட்டை சேர்த்துக் கொள்ளவும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
இதன்பின்னர், பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், பொடியாக நறுக்கிய மல்லித் தழை, மிளகுத் தூள் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்துக் கொள்ளவும். இவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஊத்தப்பம் ஊற்ற தயார் செய்து கொள்ளவும்.
பின்னர், தோசைக்கல்லை சூடேற்றி தயார் செய்து வைத்துள்ள மாவை ஊத்தப்பம் போல் ஊற்றிக் கொள்ளவும். அவற்றின் மேல் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து வேக வைத்து எடுத்தால் உளுந்து முட்டை ஊத்தாப்பம் ரெடி. நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணுங்க மக்களே!!!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“