நம் தமிழர் மரபில் உளுந்தங் கஞ்சிக்கு என்று தனியொரு இடமுண்டு. இந்த கஞ்சியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உயிரணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும். இடுப்பு பகுதிக்கு வலு கிடைக்கும். தாம்பத்தியத்தில் அதிக நாட்டத்தை உண்டாக்கும் ஆரோக்கியமான கஞ்சி இது. சுவையான உளுந்தங் கஞ்சி எப்படி செய்வது என்பது இங்கே
Advertisment
தேவையானவை
பச்சரிசி- 200 கிராம் உளுந்து - 50 கிராம் மிளகு - 10 நம்பர் சீரகம் - 1 ஸ்பூன் மஞ்சள் தூள் - சிறிதளவு
செய்முறை
Advertisment
Advertisements
முதலில் மிளகு, சீரகம் இரண்டையும் நெய்யில் வறுத்து அவற்றோடு கொஞ்சம் மஞ்சள் தூளைச் சேர்த்துக் கொள்ளவும். அரிசியையும், உளுந்தையும் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைக்கவும்.ஒரு கொதி வந்ததும் மிளகு, சீரகம், மஞ்சள் கலவையையும் அதனோடு சேர்த்துக் கொதிக்கவிட்டு பின்பு தேவையான அளவு உப்பு கஞ்சியாக்கி இறக்கவும். சுவையான உளுந்தங் கஞ்சி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“