scorecardresearch

ஹீட்டான உணவு vs குளுமையான உணவு: எது சாப்பிட்டால் நல்லது?

எல்லா மசாலா பொருட்களும் சூடு தன்மை கொண்டது என்று எல்லா இடங்களிலும் கூறப்படுகிறது. ஆனால் சீரகம் மற்றும் பெருஞ்சீரகம் மட்டும் குளுமை தன்மை கொண்டவை.

ஹீட்டான உணவு vs குளுமையான உணவு

சில உணவுகள் ஹீட் ஆன உணவுகள் என்றும் சில உணவுகள் குளிர்ச்சியை தருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆயுர்வேதிக் மருத்துவ முறையில்தான் உடலின் வெப்ப நிலைக்கு ஏற்றவாறு உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.முந்தய காலத்தில் வழக்கத்தில் இருந்த வைத்திய முறைகளின் குறிப்புகள் மற்றும் மருந்துகளின் செய்முறையை ஆயிர்வேதம் கொண்டது. இந்நிலையில் இதில் இருக்கும் தகவலை நாம் தற்போது இருக்கும் அறிவியல் ஆய்வோடு ஒப்பிட்டு பார்த்து பயன்படுத்த வேண்டும்.

குறிப்பாக வாழைப்பழத்தை குளுமை தருவதாக கூறப்படுகிறது. அதேவேளையில் மாம்பழங்கள் சூடு நிறந்தது என்று கூறப்படுகிறது. ஆனால் நமது உடல் இவை இரண்டையும் சாப்பிட்டாலும் ஒரே வெப்ப நிலையில்தான் இருக்கப்போகிறது. இரண்டு உணவுகளில் இனிப்பு சத்து மற்றும் நார்சத்து இருக்கிறது. இதனால் சூடு அல்லது குளிர்ந்த உணவுகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது.

இதேநிலையில், நாம் சாப்பிடும் உணவுகள், செரிமாணமாகும்போது அது சூடு அல்லது குளிர்ந்த உணர்வு வெளிப்படுத்தும். குறிப்பாக நாம் சாப்பிடும் அரிசி கொஞ்சம் சீக்கிரமாக ஜீரணிக்கும். இது ஜீரணக்கும்போது, ஹீட் நிறைந்த உணவுதான்.

நாம் நெல்லிக்காய்யை சாப்பிடும்போது ஒரு சுவையில் இருக்கும். அதுவே தண்ணீர் குடித்தால் இனிப்பாக மாறிவிடும். அதுபோல அது ஜீரணக்கப்படும்போது மேலும் இனிப்பாக மாறும்.

ஆனால் சூடு மற்றும் குளுமையான உணவுகளில் குழப்பங்கள் உள்ளது. பச்சைபயறு, தேங்காய்யை  குளுமையான உணவு என்று வடக்கில் கூறப்படுகிறது. இந்நிலையில் தெற்கில் இது சூடான பொருட்கள். எள்ளு மற்றும் புளி உள்ளிட்டவை வடக்கில்  சூடு என்றும், தெற்கில்  குளுமை என்று கூறப்படுகிறது.

எல்லா மசாலா பொருட்களும் சூடு தன்மை கொண்டது என்று எல்லா இடங்களிலும் கூறப்படுகிறது. ஆனால் சீரகம் மற்றும் பெருஞ்சீரகம் மட்டும் குளுமை தன்மை கொண்டவை.

இந்நிலையில் சூடான பொருட்கள் முகப்பருக்களை உருவாக்கும் என்று கூறுவதற்கு எந்த அறிவியல் ஆதாரம் இல்லை. சூடான தன்மை கொண்ட பப்பாளி, மாதவிடாய் சுழற்சியை சரி செய்யும் என்பதற்கும் எந்த அறிவியல் ஆய்வுகளும் இல்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Understanding the debate between hot and cold foods

Best of Express