உடலுக்கு வலு சேர்க்கும் உளுந்து வைத்து ஒரு டேஸ்டியான உளுந்து உருண்டை எப்படி செய்வது என்று பார்ப்போம். இந்த உளுந்து உருண்டையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம். வெறும் 7 பொருட்கள் வைத்து சீக்கிரமாக ஒரு ஹெல்தியான ஸ்நாக்ஸ் ரெஸிபி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
உளுந்து
பொட்டுக்கடலை
ஏலக்காய்
நாட்டுச்சர்க்கரை
நல்லெண்ணெய்
நெய்
முந்திரி
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு உளுந்து எடுத்து கழுவி காய வைக்கவும். பின்னர் நன்கு காய்ந்ததும் வறுக்க வேண்டும். ஒரு கடாயில் உளுந்தை சேர்த்து மிதமான சூட்டில் வறுக்க வேண்டும். பின்னர் அதில் அரை டம்ளர் பொட்டுக்கடலை போட்டு வறுத்து ஆற வைக்கவும். ஒரு மிக்ஸ் ஜாரில் சேர்த்து அரைக்கவும். வாசனைக்கு ஏலக்காய் சேர்த்து மைய அரைக்கவும்.
பின்னர் இந்த உளுந்து மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு அதனுடன் கருப்பட்டி பொடியை சேர்த்து கலந்து விடவும். பின்னர் இதனை மீண்டும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்தால் கருப்பட்டி மற்றும் உளுந்து மாவு இரண்டும் நன்றாக கலந்து விடும்.
சத்தான கருப்பு உளுந்து உருண்டை/Ulundhu Urundai in Tamil/Karuppu Ulundhu Urundai/Black Urad Dal Laddu
பின்னர் ஒரு சின்ன வடசட்டியில் நெய், முந்திரிபருப்பு சிவக்க வறுத்து உளுந்து மாவில் சேர்த்து கலந்துவிடவும். பின்னர் கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அது சூடானதும் எடுத்து உளுந்து மாவில் சிறிது சிறிதாக சேர்த்து கலந்து விடவும். ஆறியதும் கைவைத்து பிசைந்து உருண்டை உருட்டி எடுத்தால் உளுந்து உருண்டை ரெடியாகி விடும். இதனை 10 முதல் 15 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“