/indian-express-tamil/media/media_files/2025/04/21/9N7OF4XygxvGZTRuxt3e.jpg)
கோடை விடுமுறை விட்டாச்சு இனி பிள்ளைகள் எதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க சொல்லி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். தினமும் ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அதனால் இனி விதவிதமான ஸ்நாக்ஸ் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
அதுவும் பிள்ளைகளுக்கு ஹெல்தியாகவும் கடைகளில் கிடைப்பது போன்றும் செய்து கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள். கேக், முறுக்கு, ஜூஸ், பர்பி என பலவகையான் ஸ்நாக்ஸ் வகைகள் உள்ளது. அதை எல்லாம் செய்வதை விட பிள்ளைகளுக்கு பிடித்த மாதிரி செய்வது தான் டாஸ்க்.
அப்படியாக பிள்ளைகளுக்கு பிடித்த மாதிரி உளுந்துவடை எப்படி செய்வது என்று டீ கடை கிச்சன் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
உளுந்து -250 கிராம்
எண்ணெய் -50 மில்லி
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
இஞ்சி
கருவேப்பிலை
மல்லி இலை
தேங்காய் துருவல்
மிளகு - அரை டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - அரை டீஸ்பூன்
அரிசி மாவு
கடலை மாவு
செய்முறை
உளுந்து எடுத்து ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர் இந்த உளுந்தை அரைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் சிறிது சிறிதாக மாவில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அரைத்து எடுத்த மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கருவேப்பிலை, தேங்காய் துருவல், மிளகு, சீரகம், உப்பு, அரிசி மாவு, கடலை மாவு ஆகியவற்றை சேர்த்து கைவைத்து பிசைந்து கொள்ளவும்.
பின்னர் எண்ணெய் சூடானதும் மாவு திரட்டி போட்டு வடை சுட்டு எடுக்கலாம். தீயவிடாமல் இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் சுவையாக இருக்கும். கையில் மாவை போடத் தெரியாதவர்கள் ஒரு டம்ளரில் பிளாஸ்டிக் கவர் கட்டி மேலே எண்ணெய் தடவி அதன் மேல் மாவை வைத்து ஓட்டை போட்டு அப்படியே எண்ணெயில் போடலாம்.
மேற்குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி வீட்டிலேயே மிருதுவான உளுந்து வடை ரெஸ்டாரெண்ட் ஸ்டைல் க்ரிஸ்பியாக செய்யலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.