ஒரு முறை உளுந்து வைத்து இப்படி அல்வா செய்து பாருங்க .செஃப் பட்டின் அசத்தல் ரெசிபி.
தேவையான பொருட்கள்
200 கிராம் உளுந்து
3 ஸ்பூன் நெய்
100 கிராம் முந்திரி
அரை லிட்டர் தண்ணீர்
200 கிராம் சர்க்கரை
1 ஸ்பூன் ஏலக்காய் தூள்
8 ஸ்பூன் நெய்
பாதாம் 4 ஸ்பூன்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் உளுந்தை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். நிறம் மாறியதும் அடுப்பை அணைக்கவும். தொடர்ந்து உளுந்தை நன்றாக அரைத்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து அதில் முந்திரி சேர்த்து கிளரவும். நன்றாக நிறம் மாறும் வரை வறுக்கவும். முந்திரியை எடுத்து வைக்கவும். தொடர்ந்து அந்த நெய்யில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். அதில் பொடித்த உளுந்தை சேர்த்து கிளரவும். தொடர்ந்து அதில் சர்க்கரை சேர்த்து கிளரவும். தொடர்ந்து கொஞ்சம் நெய் சேர்த்து கிளரவும். நன்றாக கிளரவும். ஏலக்காய் பொடி சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதில் முந்திரி, பாதாம் சேர்த்து கிளரவும். தொடர்ந்து நன்றாக கிளரவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“