உடல் சூட்டை தணிக்கும்... இத இளநீருடன் இப்படி சேர்த்து குடிங்க: டாக்டர் நித்யா
உடல் உஷ்ணத்தை தணிப்பதற்கு பாதாம் பிசினை எவ்வாறு எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். மேலும், இவற்றின் பயன்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.
உடல் உஷ்ணத்தை தணிப்பதற்கு பாதாம் பிசினை எவ்வாறு எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். மேலும், இவற்றின் பயன்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.
பாதாம் மரத்தில் இருந்து சேகரிக்கப்படும் பிசினில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கின்றன என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். குறிப்பாக, உடல் உஷ்ணம் தொடர்பான பிரச்சனைக்கு இந்த பாதாம் பிசின் மருந்தாக பயன்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
இதில் மினரல்கள், மெக்னீஷியம், ஸின்க் போன்ற சத்துகள் நிறைய இருக்கிறது. இவை ஆண்களிடத்தில் விந்தணுக்கள் உற்பத்தி மற்றும் பெண்களிடையே கருமுட்டை வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது என்று மருத்துவர் நித்யா கூறுகிறார். உடலின் ஒவ்வொரு செல்களும் புதுப்பிக்கப்படுவதற்கு பாதாம் பிசின் சாப்பிடலாம்.
ஒரு நபருக்கு சிறிய துண்டு பாதாம் பிசின் போதுமானதாக இருக்கும். இதனை நன்றாக கழுவிய பின்னர், ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் காலையில் பஞ்சு போன்ற அமீபாவாக இது காட்சியளிக்கும் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இதை ஒரு நாளைக்கு இரண்டு டீஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ளலாம்.
இவை உடல் உஷ்ணத்தை தணிப்பது மட்டுமின்றி எலும்புகளுக்கும் வலிமை சேர்க்கும். உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், இரண்டு ஸ்பூன் பாதாம் பிசினை மோரில் கலந்து குடிக்கலாம். இதேபோல், இளநீரிலும் கலந்து பாதாம் பிசினை குடிக்கலாம். இவ்வாறு செய்தால் அதிகப்படியான உடல் உஷ்ணம் குறைக்கப்படும் என்று மருத்துவர் நித்யா பரிந்துரைக்கிறார்.
Advertisment
Advertisements
பெண்களுக்கு ஏற்படும் சீரற்ற மாதவிடாய், வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகளுக்கும் பாதாம் பிசின் தீர்வாக அமைகிறது. அதன்படி, கற்றாழை ஜெல்லை நன்றாக கழுவி மிக்ஸியில் அரைக்க வேண்டும். இத்துடன் சிறிதளவு மோர் மற்றும் ஒரு ஸ்பூன் பாதாம் பிசின் சேர்த்து காலை நேரத்தில் குடிக்க வேண்டும். இப்படி தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டால் பெண்களுக்கு இருக்கும் கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகள் குணமாகும் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
நன்றி - Cosmo Health Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.