கொழுப்பை சீக்கிரம் கரைக்கும் இந்த ஜூஸ்... இந்த நேரத்தில் குடிச்சுப் பாருங்க: டாக்டர் கார்த்திகேயன் யோசனை
கற்றாழை ஜூஸ் கொழுப்பை கரைக்க எப்படி உதவி செய்கிறது என்று மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இதனை எப்படி தயாரிக்க வேண்டும் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
கற்றாழை ஜூஸ் கொழுப்பை கரைக்க எப்படி உதவி செய்கிறது என்று மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இதனை எப்படி தயாரிக்க வேண்டும் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
கற்றாழையில் நிறைய வகைகள் இருப்பதாக மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அதன்படி, சிறு கற்றாழை, பெருங்கற்றாழை, செங்கற்றாழை, பேய்க்கற்றாழை, கருங்கற்றாழை, வரிக்கற்றாழை என்று பல வகையான கற்றாழைகள் இருக்கின்றன. ஆனால், சோற்றுக் கற்றாழையை மட்டுமே மக்கள் மருந்துகாக பயன்படுத்துகின்றனர்.
Advertisment
மனிதர்களுக்கு தேவையான 22 அமினோ அமிலங்களில், 20 அமினோ அமிலங்கள் இந்த சோற்றுக் கற்றாழையில் இருக்கிறது. இது தவிர 98.5 சதவீதம் நீர்ச்சத்து இதில் இருக்கிறது. மேலும், வைட்டமின் பி1, பி2, பி3, சுக்ரோஸ், ஃப்ரக்டோஸ், கேலக்டோஸ், குளுகோஸ் போன்றவையும் இதில் இடம்பெற்றுள்ளன.
கற்றாழையில் கொழுப்பை விரைவாக குறைக்கும் தன்மையும் இருக்கிறது. இத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்த கற்றாழையை கொண்டு ஜூஸ் தயாரிக்கும் முறையை மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அதன்படி, கற்றாழையின் உள்ளே இருக்கும் ஜெல் பகுதியை குறைந்தது 7 முறையாவது கழுவ வேண்டும். மற்றொரு புறம், அரை துண்டு இஞ்சியை தோல் நீக்கி மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்ன். ஒரு டேபிள் ஸ்பூன் சியா விதைகளை 30 நிமிடங்கள் நீரில் ஊற வைக்க வேண்டும்.
இதையடுத்து கழுவி வைத்த கற்றாழை ஜெல்லை மிக்ஸியில் அரைத்து எடுக்க வேண்டும். இந்த கற்றாழை சாறுடன் இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, சிறிதளவு இந்துப்பு, கால் டீஸ்பூன் சீரகத் தூள் மற்றும் சியா விதைகளை போட்டு குடிக்கலாம். இதனை காலை நேரத்தில் குடிக்கும் போது கூடுதல் நன்மை கிடைக்கும். வெறும் வயிற்றில் அல்லது உணவு சாப்பிட்ட பின்னர் என நமது வசதிக்கு ஏற்றார் போல் இதனை குடிக்கலாம்.
Advertisment
Advertisements
உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கற்றாழை ஜூஸை நாம் தவறாமல் குடிக்க வேண்டும் என்று மருத்துவர் கார்த்திகேயன் அறிவுறுத்துகிறார்.
நன்றி - Doctor Karthikeyan Youtube Channal
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.