வெயில் காலத்தில் விரும்பி சாப்பிடும் வெள்ளரி... இனி இந்த தப்பு மட்டும் செய்யாதீங்க: டாக்டர் அருண்குமார்
வெள்ளரிக்காயில் இருக்கும் பல்வேறு விதமான சத்துகள் குறித்து மருத்துவர் அருண் குமார் விளக்கம் அளித்துள்ளார். மேலும், நமது உடலில் ஆரோக்கியத்தை வெள்ளரிக்காய் பெருமளவு மேம்படுத்துகிறது என்று அவர் கூறுகிறார்.
வெள்ளரிக்காயில் இருக்கும் பல்வேறு விதமான சத்துகள் குறித்து மருத்துவர் அருண் குமார் விளக்கம் அளித்துள்ளார். மேலும், நமது உடலில் ஆரோக்கியத்தை வெள்ளரிக்காய் பெருமளவு மேம்படுத்துகிறது என்று அவர் கூறுகிறார்.
வெள்ளரிக்காய் இந்தியாவில் தான் தோன்றியது என்று பெரும்பாலான ஆய்வுகள் கூறுகின்றன. இது இமயமலைப் பகுதியில் முதலில் தோன்றியது, பின்னர் வங்காளம் போன்ற இடங்களுக்கும் பரவியது என்று மருத்துவர் அருண் குமார் கூறுகிறார்.
Advertisment
100 கிராம் வெள்ளரிக்காயில் 15 கலோரிகள், 3 - 3.5 கிராம் மாவுச்சத்து, 0.5 - 1 கிராம் நார்ச்சத்து, 150 மில்லி கிராம் பொட்டாசியம், 16 மில்லி கிராம் வைட்டமின் கே, 3 மில்லி கிராம் வைட்டமின் சி மற்றும் 60 - 70 சதவீதம் நீர்ச்சத்து இருக்கிறது என்று மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார்.
வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடுவது நீர்ச்சத்து குறைபாட்டைத் தடுக்கும். உப்புச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து கிடைப்பதால் தசைக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். ஒரு நடுத்தர அளவு வெள்ளரிக்காய் ஒரு நாளுக்குத் தேவையான வைட்டமின் கே சத்தில் 40 சதவீதத்தை அளிக்கிறது.
எனினும், இரத்தக் குழாய்களில் இரத்தம் உறைவதைத் தடுக்கும் மருந்துகள் (வார்ஃபாரின், டைகுமரால் போன்றவை) எடுப்பவர்கள் வெள்ளரிக்காயைத் தவிர்க்க வேண்டும். வெள்ளரிக்காயில் அதிக அளவு வைட்டமின் கே இருப்பதால், இது மருந்துகளின் செயல்பாட்டில் குறுக்கிடலாம் மற்றும் இரத்த உறைதலில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என்று மருத்துவர் அருண் குமார் குறிப்பிடுகிறார்.
Advertisment
Advertisements
பலரும் கசப்புத் தன்மைக்காக வெள்ளரிக்காயின் தோலை நீக்கி விடுகின்றனர். தோலை நீக்குவதால் பெரும்பாலான வைட்டமின் சத்துக்கள் அதில் இருந்து போய்விடுகின்றன. குறிப்பாக வைட்டமின் கே மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் தோலில் அதிகம் உள்ளன. தோலை நீக்கும்போது 40 முதல் 50 சதவீதம் வரை சத்துக்களை இழக்க நேரிடும் என்று மருத்துவர் அருண் குமார் அறிவுறுத்துகிறார்.
இரண்டு அல்லது மூன்று வெள்ளரிக்காய் சாப்பிடுவதன் மூலம் இரத்தம் உறைவதற்குத் தேவையான வைட்டமின் கே சத்து போதுமான அளவு கிடைக்கும். வெள்ளரிக்காயில் உள்ள குக்குர்பிடாசின் (Cucurbitacins) என்னும் வேதிப்பொருள் அழற்சி எதிர்ப்புத் தன்மை கொண்டது. தினசரி வெள்ளரிக்காய் சேர்ப்பதன் மூலம் இரத்தக் குழாய்களில் ஏற்படும் அழற்சிகள் குறைய வாய்ப்பு இருக்கிறது.
நீண்ட கால அடிப்படையில் இது இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு வெள்ளரிக்காய் ஒரு சிறந்த உணவு. பசி எடுக்கும் போது வெள்ளரிக்காய் சாப்பிடுவது வயிறு நிறைந்த உணர்வைத் தரும். மேலும், இதில் கலோரிகள் குறைவாக இருக்கிறது என்று மருத்துவர் அருண் குமார் வலியுறுத்துகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.