ஆண்களுக்கு அற்புத மருந்து... நெய்யில் வதக்கி; பூண்டை இப்படி சாப்பிடுங்க: டாக்டர் செல்வா சண்முகம்

பூண்டு மூலமாக ஆண்களின் ஆரோக்கியம் எந்த அளவிற்கு மேம்படுகிறது என்று மருத்துவர் செல்வா சண்முகம் தெரிவித்துள்ளார். அது குறித்த தகவல்களை இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்.

பூண்டு மூலமாக ஆண்களின் ஆரோக்கியம் எந்த அளவிற்கு மேம்படுகிறது என்று மருத்துவர் செல்வா சண்முகம் தெரிவித்துள்ளார். அது குறித்த தகவல்களை இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Garlic Uses

பூண்டு, நம் சமையலறையில் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. அதன் தனித்துவமான சுவையும், நறுமணமும் உணவுகளுக்கு ஒரு சிறப்பான சுவையை தருகிறது. ஆனால் பூண்டு வெறும் உணவுப் பொருள் மட்டுமல்ல, எண்ணற்ற மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. 

Advertisment

அந்த வகையில் பூண்டு மூலமாக ஆண்களின் ஆரோக்கியம் எந்த அளவிற்கு மேம்படுகிறது என்று மருத்துவர் செல்வா சண்முகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல்களை டாக்டர் விகடன் யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார். அவற்றை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.

அதன்படி, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் ஆற்றல் பூண்டில் இருக்கிறது. இது, இனப்பெருக்க உறுப்புகளுக்கு பயனுள்ள வகையில் அமைகிறது. விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பது, விறைப்புத் தன்மை பிரச்சனையை சீரமைப்பது, உடலில் செல்களை புதுப்பிப்பது மற்றும் ஹார்மோன் சமநிலையை சீராக்குவது என்று பல்வேறு வகைகளில் பூண்டு பயன்படுகிறது என்று மருத்துவர் செல்வா சண்முகம் அறிவுறுத்துகிறார்.

இவ்வளவு மருத்துவ குணம் நிறைந்த பூண்டை எவ்வாறு மருந்தாக பயன்படுத்தலாம் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். இதற்காக பூண்டை தோல் உரித்து இட்லி தட்டில் வேக வைக்க வேண்டும். இது தவிர பசும் பாலிலும் வேக வைக்கலாம். இவ்வாறு வேக வைத்த பூண்டை அரைத்து நெய்யில் வதக்க வேண்டும்.

Advertisment
Advertisements

மற்றொரு புறம், பனை வெல்லத்தை கரைத்து வடிகட்டி பாகு காய்க்க வேண்டும். இந்தப் பாகு கம்பி பதத்திற்கு வந்ததும், பூண்டை இதில் சேர்த்து கிளற வேண்டும். மேலும், போதுமான அளவு நெய் சேர்த்து கிளறினால் பூண்டு லேகியம் தயாராகி விடும். இந்த மருந்து மூன்று மாதங்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும் என்று மருத்துவர் செல்வா சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Garlic

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: