தாய்ப்பாலுக்கு நிகரானது; இதனுடன் லவங்க பட்டை சேர்த்து குடித்தால் சர்க்கரை கட்டுக்குள் வரும்; டாக்டர் பொற்கொடி
ஆட்டுப் பாலில் இருக்கும் பல்வேறு மருத்துவ குணங்கள் குறித்து மருத்துவர் பொற்கொடி விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, இதில் இருக்கும் நன்மைகள் குறித்து இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
ஆட்டுப் பாலில் இருக்கும் பல்வேறு மருத்துவ குணங்கள் குறித்து மருத்துவர் பொற்கொடி விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, இதில் இருக்கும் நன்மைகள் குறித்து இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
சித்த மருத்துவத்தில் தாய்ப்பாலுக்கு நிகராக ஆட்டுப் பாலை கருதுவதாக மருத்துவர் பொற்கொடி குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் ஆட்டுப் பாலுடன் சேர்த்து சில உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது நம் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
எலும்புகளை உறுதியாக்குவதற்கும், மூட்டு வலியை குறைக்கவும் ஆட்டுப் பாலுடன் மஞ்சள் தூளை சேர்த்து காய்த்து குடிக்கலாம் என்று மருத்துவர் பொற்கொடி அறிவுறுத்துகிறார். இதேபோல், இரத்த சோகை இருப்பவர்கள் தங்களுடைய ஹீமோகுளோபின் அளவை உயர்த்த ஆட்டுப் பாலுடன் பேரிச்சம் பழத்தை காய்த்து குடிக்கலாம்.
மேலும், சிறுநீரக கோளாறு இருப்பவர்கள் அரை கிளாஸ் ஆட்டுப் பாலுடன், அரை கிளாஸ் தண்ணீர் சேர்த்து காய்த்து குடிக்கலாம். உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு கிளாஸ் ஆட்டுப் பாலுடன், ஒரு வாழைப்பழ, 10 பாதாம் ஆகியவற்றை சேர்த்து அரைத்து குடிக்கலாம் என்று மருத்துவர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
இது தவிர சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அரை கிளாஸ் ஆட்டுப் பாலுடன், சிறிதளவு பட்டைத் தூள் சேர்த்து காய்த்து குடிக்கலாம். தையிராயிடு பிரச்சனை இருப்பவர்கள் ஒரு கிளாஸ் ஆட்டுப் பாலுடன், ஒரு டீஸ்பூன் அமுக்குரா பொடியை சேர்த்து குடிக்கலாம்.
Advertisment
Advertisements
எனவே, நம்முடைய தேவை அறிந்து ஆட்டுப் பால் குடித்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று மருத்துவர் பொற்கொடி குறிப்பிட்டுள்ளார்.
நன்றி - Dr.Porkodihari Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.